logo
கணினியில் அதிகமானோர் பயன்படுத்தும் மிக மோசமான பாஸ்வேர்டுகள்

கணினியில் அதிகமானோர் பயன்படுத்தும் மிக மோசமான பாஸ்வேர்டுகள்

21/Nov/2020 04:43:07

புதுதில்லி: 2020 -ஆம் ஆண்டின் மிக மோசமான 10 பாஸ்வேர்டுகளில் உங்களுடையதும் இருக்கிறதா. 2020-ஆம் ஆண்டு, கொரோனா மூலம் அதிக மக்களை டிஜிட்டல் பிரியர்களாக மாற்றியதால் பாஸ்வேர்டு பயன்பாடும் அதிகமாகியிருக்கிறது.

குழந்தையின் பள்ளி ஆன்லைன் வகுப்புகள் முதல் அலுவலகத்தில் கொடுத்த லேப்டாப்புகள் வரை பாஸ்வேர்டுகளால் நிரம்பிக் கிடக்கும் வாழ்க்கையில் நினைவில் வைத்திருக்க சிரமமான பாஸ்வேர்டுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, டைப் செய்ய எளிதான பாஸ்வேர்டுகளைப் பயன்படுத்தும் வழக்கம் பெரும்பாலானவர்களிடம் இருக்கிறது.

இப்படிப்பட்ட செயலினால் ஹேக்கர்களால் எளிதில் அவை பிரேக் செய்யப்படுவதற்கான வாய்ப்பு அதிகம். அந்த வகையில், எளிதில் ஹேக்கர்களால் கணிக்கக்கூடியதும், பிரேக் செய்யக்கூடியதுமான பாஸ்வேர்டுகளை NORDPASS என்ற பாஸ்வேர்டு மேனேஜர் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

NORDPASS என்பது பாஸ்வேர்டுகளை என்கிரிப்ட் (Encrypt) செய்து ஹேக்கர்களின் கையில் சிக்காமல் பத்திரமாகப் பூட்டி வைத்து, நமக்குத் தேவையானபோது நினைவுபடுத்தும் ஒரு சாஃப்ட்வேர். உலக அளவில் பயன்படுத்தும் அவர்களது கஸ்டமர்களின் பாஸ்வேர்டுகளிலிருந்து வரிசைப்படுத்தி மோசமான பாஸ்வேர்டுகளின் லிஸ்டை வெளியிட்டிருக்கிறது அந்த நிறுவனம்.

அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, 2020ஆம் ஆண்டின் மோசமான பாஸ்வேர்டுகள் லிஸ்ட்டில் முதலிடத்திலிருப்பது 123456 என்ற பாஸ்வேர்டுதான். இந்த 123456 என்ற பாஸ்வேர்டு 2015-இல் இருந்தே முதலிடத்தில்தான் இருந்து வருகிறது.

அடுத்ததாக, password என்ற வார்த்தையை பாஸ்வேர்டாக பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 123456 என்ற பாஸ்வேர்டை பயன்படுத்துபவர்களைவிட அதிகரிக்கக்கூடும் என 2015இல் கணிக்கப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு பாஸ்வேர்டு என்ற சொல் நான்காவது இடத்துக்குச் சென்றுவிட்டது. இதற்குக் காரணம், ஒரு பாஸ்வேர்டுக்கான குறைந்தபட்ச எழுத்துகளை ஆறிலிருந்து ஒன்பது எழுத்துக்களாக பல இணையதளங்கள் மாற்றிவிட்டதனால் கூட இருக்கலாம் என்கின்றனர்.

2020 -இல் அதிக நபர்களால் பயன்படுத்தப்பட்ட டாப் 10 பட்டியலில் பாஸ்வேர்டுகள்    123456,  123456789,    picture1, password,    12345678,  111111, 123123, 12345, 1234567890, senha  ஆகியவைதான் இடம் பெற்றுள்ளன.

Top