logo
கோபிச்செட்டிபாளையம் பச்சமலை பாலமுருகன் கோயிலில் சூரசம்காரம்

கோபிச்செட்டிபாளையம் பச்சமலை பாலமுருகன் கோயிலில் சூரசம்காரம்

20/Nov/2020 05:59:00

ஈரோடு: ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் பிரசித்தி பெற்ற பச்சமலை பாலமுருகன் கோயிலில் சூரசம்கார நிகழ்வு குறைந்தளவு பக்தர்களுடன் கோயில் பிரகாரத்திலேயே நடைபெற்றது.

முன்னொருகாலத்தில் துர்வாசமுனிவர் ஒருமுறைகொங்கு நாட்டிற்குஎழுந்தருளினார். குன்னத்தூர் அருகேவந்து,சிவபூஜை செய்யசரியான இடத்தை தேடமுற்பட்டார். அப்போது ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகேஅமைந்துள்ள மொடச்சூர் என்னும் ஊர் தான் சிவபூஜை செய்ய சரியான இடம் என்பதை ஞானதிருஷ்டியால் உணர்ந்து அங்கு வந்து சிவபூஜை செய்ய முற்படுகிறார். 

அப்போது குறை தீர்க்கும் குமரக் கடவுளை காண எண்ணிஅவரதுமனம் பூஜையில் திளைக்கமறுக்கிறது. குறைதீர்க்கும் குகனைஎண்ணிதவத்தால் அருகில் உள்ளபச்சைமலை என்னும் குன்றை அறிகிறார். அங்குஅவருக்கு பாலதண்டாயுதபாணியாக முருகன் காட்சிஅளிக்கிறார். அவரின் வேண்டுகோளை ஏற்று இறைவன் பச்சைமலையில் நிலையாகக் குடிகொள்கின்றான். துர்வாசர் முருகனைமேற்குநோக்கிபிரதிஷ்டைசெய்கிறார்.

 இவ்வாறு பிரதித்தி பெற்ற அருள்மிகு பச்சமலை பாலமுருகன் கோயிலில் ஒவ்வொருஆண்டும் கார்த்திகைமாதம் கந்த சஷ்டி சூரசம்கார விழா வெகுசிறப்பாக நடைபெறுவது வழக்கம். சூரசம்ஹாரம் என்பது சூரபத்மன் எனும் அரக்கனைஅழித்த நிகழ்வாகும். சூரபத்மனை முருகன் அழித்தார். அதன் நினைவாக முருகனுடைய ஆலயங்களில் இந்தநிகழ்வினைவிழாவாககொண்டாடுகிறார்கள்.

 பச்சமலைபாலமுருகன் கோயில் கந்த சஷ்டி திருவிழாகடந்த 15-ஆம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. அன்று விரமிதமிருக்கும் பக்தர்கள் கைகளில் காப்புகட்டி சஷ்டி விரதம் மேற்கொண்டனர். விழாவில் 6-ஆம் நாளான இன் று சூரசம்ஹாரம்  நிகழ்வு நடைபெற்றது.  

இன்று அதிகாலை 3 மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டு விஸ்வரூப தீபாராதனை உதயமார்த்தாண்ட அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.  அதனைதொடர்ந்து யாகசாலை பூஜையும் பூர்ணாஹுதி தீபாராதனை, சுவாமி,அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றதது.

அதன்பின்னர்,யாகசாலையில் இருந்து சுவாமிசப்பரத்தில் கோயில் பிரகாரத்தில் உள்ள சந்நிதிகள் முன் எழுந்தருளினார். அங்குசுவாமி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அங்கிருந்து சூரசம்ஹாரத்துக்காக கோயில் சுற்று பிரகாரகாரத்திற்கு சுவாமி எழுந்தருளினார். வழக்கமாக சூரசம்ஹாரத்தைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள். கெரோனா தடுப்பு நடவடிக்கையாக இந்த ஆண்டு சூரசம்ஹார நிகழ்ச்சியில் கலந்துகொள்ள பக்தர்களுக்கு அனுமதியில்லை. 

அதனால் குறைந்தளவு பக்தர்களே கலந்து கொண்டனர். சூரனைவதம் செய்யும் நிகழ்வு கோபிசெட்டிபாளையம் நகர் பகுதி முழுவதும் வலம் வந்து நடைபெற்று வந்தநிலையில் இந்தாண்டு கொரோனாநோய் தடுப்புகோயில் பிரகாரத்தில் கோலகலமாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பக்தர்கள் முருகன் பிரகாரத்திற்கு பன்னீர் தெளித்து வழிபாடு செய்தனர். இந்நிகழ்வைக் காண ஏராளமான பக்தர்கள் வருகைதந்த போது மலை ஏற அனுமதி மறுக்கப்பட்டதால் ஏமாற்றமடைந்தனர். 


Top