logo
ஈரோடு மாவட்ட அணை நீர்பிடிப்பு பகுதிகளில்  3 -வது நாளாக  தொடர்  மழை

ஈரோடு மாவட்ட அணை நீர்பிடிப்பு பகுதிகளில் 3 -வது நாளாக தொடர் மழை

19/Nov/2020 07:16:17

ஈரோடு:வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை முதல் மிதமான மழை பெய்து வருகிறது.

 ஈரோடு மாவட்டத்திலும் கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு பகுதிகளில் பலத்த மழை முதல் மிதமான மழை பெய்தது. குறிப்பாக வரட்டுப்பள்ளம், குண்டேரி பள்ளம், பெரும் பள்ளம் போன்ற அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. 

இந்த அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. சத்தியமங்கலம், தாளவாடி வனப் பகுதிகளில் தொடர் மழை காரணமாக குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது. கொடுமுடி பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதேபோல் கவுந்தபாடி மொடக்குறிச்சி பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. நேற்று மூன்றாவது நாளாக மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக வரட்டுப்பள்ளம் அணை பகுதியில் 23.2 மி.மீ மழை பதிவாகி உள்ளது.

இதைப்போல் கவுந்தப்பாடி பவானி மொடக்குறிச்சி குண்டேரி பள்ளம் போன்ற பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. ஈரோடு மாநகரை பொறுத்தவரை நேற்று மதியம் முதல் இரவு வரை தொடர்ந்து சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது.

ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை மில்லி மீட்டரில் வருமாறு:வரட்டுப்பள்ளம் - 23. 2.கவுந்தப்பாடி - 17.பவானி  - 10.8. மொடக்குறிச்சி  - 10.ஈரோடு - 9.குண்டேரிபள்ளம்  - 6. சென்னிமலை - 5.பெருந்துறை  - 2 .


Top