logo
பக்தர்களுக்கு தங்கம், வெள்ளியை பிரசாதமாக வழங்கும் மகாலட்சுமி கோவில்...!

பக்தர்களுக்கு தங்கம், வெள்ளியை பிரசாதமாக வழங்கும் மகாலட்சுமி கோவில்...!

18/Nov/2020 07:16:28

போபால்: மத்திய பிரதேசம் மாநிலத்தின் வட மேற்கு பகுதியில் ரத்னபுரி என்ற நகரம் உள்ளது. இங்கு உள்ள மகாலட்சுமி கோவிலில் பக்தர்களுக்கு தங்கம், வௌ்ளி ஆகியவை பிரசாதமாக வழங்கப்படுகிறது.

இந்த கோவிலுக்கு வந்து மகாலட்சுமி தேவியை வழிபட்டு செல்லும் பக்தர்கள், தங்களின் கோரிக்கை நிறைவேறினால், நேர்த்திக்கடனாகப் பணம் அல்லது பொருளுக்கு பதிலாக தங்கம் அல்லது வெள்ளியை காணிக்கையாக வழங்குகின்றனர். இப்படி பக்தர்கள் வழங்கும் தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவை இந்த கோவிலில் மலைபோல குவிந்து கிடக்கிறது.ஆண்டு முழுவதும் காணிக்கையாக சேரும் இந்த தங்கம், வெள்ளி ஆகியவற்றை ஆண்டு தோறும் தீபாவளி தினத்தன்று இந்த கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குகின்றனர்.

இந்த கோவிலில் தரப்படும் இந்த பிரசாதத்தை யாரும் விற்பனை செய்வது இல்லை. அது இறைவனால் வழங்கப்பட்டதாக நினைத்து வைத்து பூஜிக்கின்றனர்.தீபாவளி தினத்தில் இந்த கோவிலுக்கு தரிசிக்க செல்லும் பக்தர்களில் திருமணம் ஆன பெண்களுக்கு இந்த தங்கம், வெள்ளி பிரசாதம் வழங்கப்படுகின்றது. தீபாவளி தினத்தில் இந்த கோவிலில் சுமார் ரூ.100 கோடி மதிப்பிலான தங்கம், வெள்ளி மற்றும் ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்படுவதும் வழக்கமாக உள்ளது.

ஏழை, எளியோரின் வறுமையை போக்கும் விதமாக இந்த கோவிலில் தங்கம், வெள்ளி பிரசாதமாக வழங்கப்படுகிறது. இருப்பினும் இங்கு வழங்கப்படும் தங்கத்தை விற்பனை செய்யாமல் அதை அதிர்ஷ்டமாக பலரும் வைத்துக்கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 


Top