logo
யூடியூப் தளத்தில் 100 கோடி பார்வைகள் என்கிற எண்ணிக்கையை அடைந்து சாதனை படைத்த ரௌடி பேபி பாடல் விடியோ

யூடியூப் தளத்தில் 100 கோடி பார்வைகள் என்கிற எண்ணிக்கையை அடைந்து சாதனை படைத்த ரௌடி பேபி பாடல் விடியோ

16/Nov/2020 07:34:16

தனுஷ் பாலாஜி மோகன் கூட்டணியில் உருவான படம் மாரி 2. இதில் சாய் பல்லவி, வரலட்சுமி போன்றோர் நடித்தார்கள். இசை யுவன் சங்கர் ராஜா. இந்தப் படத்தில் இடம்பெற்ற ரௌடி பேபி பாடலின் விடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி அதிக வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக, நடன இயக்குநர் பிரபுதேவாவுக்கும் நடிகை சாய் பல்லவிக்கும் அதிகப் பாராட்டுகள் கிடைத்தன.

கடந்த வருடம் ஏப்ரல் மாதம், பில்போர்ட் யூடியூப் பட்டியலில் நான்காம் இடம் பிடித்து அசத்தியது. இதனால் சர்வதேச அளவில் இப்பாடலின் விடியோவுக்கும் கவனம் கிடைத்தது. மேலும் யூடியூப் தளத்தில், தமிழ்ப் பாடல்களில் அதிகப் பார்வைகள் பெற்ற பாடல் என்கிற சாதனையையும் அடைந்தது.

கடந்த வருடம் ஏப்ரல் மாதம், யூடியூப் தளத்தில் ரௌடி பேபி பாடல் 400 மில்லியன் அதாவது பு0 கோடி பார்வைகளைப் பெற்று அசத்தியது. இதனால் யூடியூபில் இந்த எண்ணிக்கையைத் தொட்ட முதல் தென்னிந்தியப் பாடல் என்கிற பெருமையையும் அடைந்தது.

தனுஷ் - அனிருத் கூட்டணியில் உருவான கொலவெறி பாடலும் சாய் பல்லவியின் முதல் தெலுங்குப் படமான  ஃபிடாவியில்  இடம்பெற்ற வச்சிண்டே பாடலும் முறையே 179 மில்லியன் பார்வைகளும் 196 மில்லியன்- பார்வைகளும் அப்போது பெற்றிருந்தன. அந்த எண்ணிக்கைகளைச் சுலபமாக தாண்டியது ரௌடி பேபி பாடல்,

கடந்த வருடம் யூடியூபில் அதிக டிரெண்டிங் ஆன விடியோக்களில் இந்திய அளவில் முதலிடம் பிடித்தது ரௌடி பேபி பாடல் இதுதவிர உலகளவில் அதிகம் பேர் பார்த்த விடியோக்களில் ரெளடி பேபிக்கும் இடம் கிடைத்தது.

ரௌடி பேபி பாடலின் சாதனைகள் இன்னும் தொடர்கின்றன. கடந்த ஜூலை மாதம் யூடியூபில் 900 மில்லியன் அதாவது 90 கோடி பார்வைகள் இதற்குக் கிடைத்தன. இந்நிலையில் 100 கோடி பார்வைகள் என்கிற சாதனையை எட்டியுள்ளது ரெளடி பேபி பாடல், தென்னிந்திய மொழிகளில் வேறு எந்தப் பாடலும் யூடியூப் தளத்தில் இந்த எண்ணிக்கையைத் தொட்டதில்லை.

இதுகுறித்து நடிகர் தனுஷ் கூறியதாவது: ஒய் திஸ் கொலைவெறி பாடல் வெளியான 9 ஆவது வருடத்தில் இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளது ரௌடி பேபி பாடல்.100 கோடி பார்வைகளைத் தொட்ட முதல் தென்னிந்தியப் பாடல் என்பதில் பெருமை கொள்கிறோம். அனைவருக்கும் படக்குழு நன்றி தெரிவித்துக் கொள்கிறது என்றார்.


Top