logo
கமலா ஹாரிஸ் வெற்றியை அவரது சொந்த கிராமத்தில் மக்களோடு கொண்டாடிய உணவு அமைச்சர் காமராஜ்

கமலா ஹாரிஸ் வெற்றியை அவரது சொந்த கிராமத்தில் மக்களோடு கொண்டாடிய உணவு அமைச்சர் காமராஜ்

10/Nov/2020 12:45:43

அமெரிக்காவில் துணை அதிபர் பதவிக்கு ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட இந்திய வம்சாவளி பெண்ணான கமலா ஹாரிஸ்(55) வெற்றி பெற்றுள்ளார். இவரது பூர்வீகம் திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே உள்ள துளசேந்திரபுரம் கிராமம் ஆகும். கமலா ஹாரிசின் தாய்வழி தாத்தா கோபாலன், பாட்டி ராஜம் ஆகியோர் மன்னார்குடியை அடுத்துள்ள துளசேந்திரபுரம் கிராமத்தை சேர்ந்தவர்கள்.

கமலா ஹாரிஸ் வெற்றி கண்டு கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். பட்டாசுகள் வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். தங்களின் வீட்டு வாசல்களில் ரங்கோலி வரைந்து அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

அமைச்சர் காமராஜ் அங்குள்ள கோவிலுக்குச் சென்று அர்ச்சனை செய்து வழிபட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கூறியதாவது, இந்த சிறிய கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண் இப்போது அமெரிக்காவில் மிக உயர்ந்த பதவிகளில் ஒன்றில் அமர்கிறார். இது ஒரு பெருமையான தருணம் என்றார்.

Top