logo
தென்பெண்ணை ஆற்றில் கலக்கும் ரசாயன கழிவுகள் குறித்து முதல்வர் கர்நாடக மாநில அரசுடன் பேசி வருகிறார்:அமைச்சர் கே சி கருப்பண்ணன் தகவல்

தென்பெண்ணை ஆற்றில் கலக்கும் ரசாயன கழிவுகள் குறித்து முதல்வர் கர்நாடக மாநில அரசுடன் பேசி வருகிறார்:அமைச்சர் கே சி கருப்பண்ணன் தகவல்

10/Nov/2020 12:23:21

ஈரோடு: கர்நாடகாவில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் கலக்கும் ரசாயன கழிவுகள் குறித்து முதலமைச்சர் அம்மாநில அரசுடன் பேசி வருகிறார் என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே சி கருப்பண்ணன் தெரிவித்தார்.

பவானி நகரில் 20 தொடக்க கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் சார்பில் உறுப்பினர்களுக்கு ரூ.70.75 லட்சம் போனஸ் மற்றும் பங்கு ஈவுத்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து  பவானி நிலவள வங்கி சார்பில் அமைக்கப்பட்ட பட்டாசு கடையை திறந்து வைத்தார்.

அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது: ,பவானி சரகத்தில் உள்ள கைத்தறி நெசவாளர் சங்கங்கள் நான்கு தவிர எஞ்சியவை லாபத்தில் இயங்குகின்றன அனைத்து சங்கங்களையும் லாபத்தில் கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சங்கங்களின் சார்பில் கடந்த நிதியாண்டில் ரூ. 25 கோடி மதிப்பிலான துணிகள் உற்பத்தி செய்யப்பட்டு ரூ.30 கோடி அளவிற்கு விற்பனை செய்யப்பட்டது. இதன் மூலம் ரூ.1.20 கோடி லாபம் ஈட்டப்பட்டது 50% பங்கு தொகையாக. உறுப்பினர்களுக்கு வழங்கப்படுகிறது. 

கடந்த எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் தான் கூட்டுறவு சங்கங்கள் உருவாக்கப்பட்டு நெசவாளர் நலன் பாதுகாக்கப்பட்டது. அவரது ஆட்சியில் 15 சதம் லாப ஈவுத்தொகை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது. பின்னர், அம்மா ஆட்சியில் அது 30 சதமாக உயர்ந்து நெசவாளர்களுக்கு ஓய்வுதியம் வீட்டு வசதி உட்பட பல்வேறு நலத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப் பட்டன.

 தற்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு நெசவாளர்களின் நலனை முழுமையாக பாதுகாத்து வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் சாயப்பட்டறைகள் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்துவதை நிரந்தரமாக தடுக்க  ஒரு சாயப்பட்டறை மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தென்பெண்ணை ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க கர்நாடக அரசுடன் தமிழக முதல்வர் பேசியுள்ளார். உரிய நடவடிக்கை விரைவில் அவர் எடுப்பார். அரசு உத்தரவின்படி காலை ஒரு மணி நேரம் மாலை ஒரு மணி நேரம் பாதுகாப்பாக மக்கள் பட்டாசு வெடித்து தீபாவளியை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்றார் அமைச்சர் கே,சி. கருப்பண்ணன்.

 நிகழ்ச்சியில், பவானி ஒன்றிய செயலாளர் எஸ்எம் தங்கவேலு நகர செயலாளர் கிருஷ்ணராஜ், மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளர் கே.ஆர். ஜான், சுற்றுச்சூழல் வாரிய உறுப்பினர் தட்சிணாமூர்த்தி,, பவானி ஒன்றிய தலைவர் பூங்கோதை வரதராஜ், முன்னாள் நகர்மன்றத் தலைவர் துரை உட்பட பலர் கலந்து கொண்டனர்

Top