logo
நர்சரி பள்ளிகளுக்கு DTCP அனுமதி பெறுவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்: தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு கோரிக்கை

நர்சரி பள்ளிகளுக்கு DTCP அனுமதி பெறுவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்: தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு கோரிக்கை

08/Nov/2020 03:33:24

புதுக்கோட்டை:  புதுக்கோட்டையில் தலைவர் அஸ்ரப் அன்சாரி தலைமையில் நடைபெற்ற மாவட்ட தனியார் பள்ளிகள் கூட்டமைப்பின் ஆலோசனைக்கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

செயல் தலைவராக நியமிக்கப்பட்ட முத்துசாமி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் சக்திவேல் முன்னிலை வகித்தார். செயலாளர் முத்துகருப்பன் வரவேற்றார்.

 கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட பிற தீர்மானங்கள்:  சென்னை பெருநகர் தவிர்த்து பிற இடங்களில் வீடு கட்டிட அனுமதி 10,000 சதுர அடி என அரசு அனுமதி வழங்கி உள்ளது. இந்த நிலையில் கிராம புரா வளர்ச்சியை கருத்தில் கொண்டு 10,000 சதுர அடி கட்டிடத்திற்கு புதுவகை பயன்பாட்டு கட்டிடமாக (பள்ளி  /நூலகம், சிறிய மருத்துவமனை) ஆகிய பயன்பாட்டிற்கு உள்ளாட்சி நிர்வாகமே அனுமதி வழங்க வேண்டும்.

இந்த கல்வி ஆண்டே நர்சரி பள்ளிகளை நடுநிலைப்பள்ளியாக்கி தரம் உயர்த்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.    பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரின் கருத்தை அறிந்து பள்ளிகளை உடனடியாக திறக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின் படி 2019-2020 கல்வி கட்டண நிலுவையை உடனே மெட்ரிக் மற்றும் நர்சரி பள்ளிகளுக்கு இந்த இக்கட்டான சூழ் நிலையில் உடனே வழங்க வழி வகை செய்யவேண்டும்.

கல்வி கட்டணத்தை நிர்ணயம் செய்ய கல்வி கட்டணத்தை விண்ணப்பத்தை சமர்ப்பிக்க காலக்கெடு 30-11-2020 வரை நீடிப்பு செய்து வழங்கியுள்ளது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். அதே நேரம் விண்ணப்பித்த பள்ளிகளை நேரில் அழைக்காமல் விண்ணப்பத்தை பரிசீலனை செய்து இக்கல்வியாண்டுக்கான கட்டணத்தை நிர்ணயம் செய்து வழங்க வேண்டும்.

 சிறுபான்மை பிரிவு மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை பெற சமைப்பிற்க வேண்டிய அடிப்படை சான்றுதலான வருமானம், இருப்பிடம் மற்றும் சாதி சான்றிதழ்களை பெற அதிக காலதாமதமாகிறது. ஆகவே இவற்றை கருத்தில் கொண்டு காலக்கெடுவினை வருகின்ற 31-12-2000 வரை நீடிக்க வேண்டும்.   நர்சரி பள்ளிகளுக்கு DTCP அனுமதி பெறுவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்.  

புதுக்கோட்டை மாவட்டத்தில் தனியார் பள்ளிகளுக்கான ஒப்புதல் ஆணைகளை விரைவில் பரிசீலித்து வழங்கி வரும் முதன்மை கல்வி அலுவலர் அவர்களுக்கும் புதுக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலர் அவர்கள் அறந்தாங்கி மற்றும் இலுப்பூர் கல்வி அலுவலர் அவர்களுக்கும் துணை ஆய்வாளருக்கும் நன்றி தெரிவிப்பது.                                                                                                                                                                                                     மாவட்டத்தில் கொரோனா தொற்றுநோய் குறைவதற்கு நன்கு பணியாற்றிய மாவட்ட ஆட்சி தலைவர் மருத்துவர்கள் செவிலியர்கள் காவல் துறையினர் மற்றும் துப்புறவுத் தொழிலாளர்கள் ஆகியோருக்கு நன்றி தெரிவிப்பது என்பன உள்ளிட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.   

ஒருங்கிணைப்பாளர்  ரமணன்  கூட்டப்பொருள் குறித்தும் தீர்மானங்கள் விளக்கி பேசினார்.  பாதுகாப்பாக பட்டாசு வெடிக்க விழிப்புணர்வுகளை மாணவர்களுக்கு எடுத்துக்கூறுமாறும்,   முன்களப் பணியாளர்களை கௌரவிக்கும் வகையில் இந்த தீபாவளி பண்டிகையை கொண்டாட அனைத்து பள்ளி நிர்வாகிகளையும் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி கேட்டுக்கொண்டார்.     

 கெளவரத்தலைவர், சேகர், பஷீர், அற்புத அலெக்சாண்டர் ராஜ் சக்திவேல், டைமண்ட்ஒருங்கிணைப்பாளர்  ரமணன்     மற்றும் . பல்வேறு ஒன்றியங்களிலிருந்து  பள்ளி தாளாளர்கள்   கலந்து கொண்டனர்    நிறைவாக  பொருளாளர் மேசியா சந்தோசம் நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகிகள்  செய்திருந்தனர் .


Top