logo
புதுகை டிவிஎஸ் கார்னரில் சத்தியராம்-ன் குட்டி சுட்டி புதிய கிளை திறப்பு

புதுகை டிவிஎஸ் கார்னரில் சத்தியராம்-ன் குட்டி சுட்டி புதிய கிளை திறப்பு

05/Nov/2020 09:46:05

புதுக்கோட்டை: புதுக்கோட்டை டிவிஎஸ் கார்னரி்ல் சத்தியராம் -ன் சார்பு நிறுவனமான குட்டி சுட்டி குழந்தைகளுக்கான உலகம் என்றழைக்கும் வகையிலான பொம்மைகள், கார், குழந்தைகள் இயங்கக்கூடிய பல்வேறு உபகரணங்களின் ஏ.சி விற்பனையகத் திறப்பு விழா இன்று(4.11.2020) விமரிசையாக நடைபெற்றது.

சத்தியராம் நிறுவனங்களின்  நிர்வாகிகள் எம். ராமுக்கண்ணு, சத்தியபாமா ராமுக்கண்ணு, இரா. செந்தில்குமார், இரா. முத்துக்குமார் ஆகியோர் முன்னிலையில்  குட்டி சுட்டி கிளையை திரைப்பட நடிகர் இமான் அண்ணாச்சி திறந்து வைத்தார்.

ராஜா பர்னீச்சர் மார்ட்- ராஜாகுரூப் நிறுவனங்களின் நிறுவனர் புலவர் எம். ராஜேந்திரன் முதல் விற்பனையைத் தொடக்கி வைத்தார். கோட்டாட்சியர் எம்.எஸ். தண்டபாணி முதல் விற்பனையை பெற்றுக்கொண்டார்.

விழாவில்,  சிறப்பு அழைப்பாளர்களாக, கும்பகோணம் முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி வி. பாலசுப்பிரமணியன்,  காவல்துணை கண்காணிப்பாளர் கே.கே. செந்தில்குமார், மாவட்ட தீயணைப்புத்துறை அலுவலர் இ. பானுபிரியா, தங்க நகை வியாபாரிகள் சங்கத்தலைவர் வயி.ச. வெங்கடாஜலம், பொன்மாரி கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர் எஸ். ராமதாஸ், ரோட்டரி மாவட்ட(3000) ஆளுநர் அ.லெ. சொக்கலிங்கம், லயன்ஸ் மாவட்ட ஆளுநர் கே. சேதுசுப்பிரமணியன் ஆகியோர் பங்கேற்று குத்து விளக்கேற்றி வைத்து வாழ்த்தினர்.

இதில், புதுகை முன்னாள் நகர்மன்றத்தலைவர் ஆர். ராஜசேகரன், டாக்டர்ஸ் நர்சிங் கல்லூரி  நிர்வாகி கவிதாராஜசேகரன், லயன்ஸ் முன்னாள் தலைவர் பி.ஜவஹர், தலைவர் பி. காமராஜ், ஆர். கருணாகரன், செந்தூரான் கல்வி நிறுவனங்களின் தலைவர் ராம. வயிரவன் உள்பட நகரின் முக்கிய பிரமுகர்கள் திரளானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


Top