logo
தமிழ்நாட்டில் தமிழ் இல்லை என்றால் வேறு எந்த நாட்டில் தமிழ் இருக்கும்,  உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி

தமிழ்நாட்டில் தமிழ் இல்லை என்றால் வேறு எந்த நாட்டில் தமிழ் இருக்கும், உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி

04/Nov/2020 04:38:45

மதுரை: தமிழ் வழியில் படித்தவர்களுக்கு இடஒதுக்கீடு இருந்தும் தவறாக பயன்படுத்துவதாக கூறி மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் கூறியதாவது: தமிழகத்தில் தமிழில் படித்தவர்கள் அருகி மருகி வருகின்றனர்தமிழ்வழி இடஒதுக்கீட்டை முறைப்படுத்தும் வரை குரூப் 1 தேர்வு நடைமுறைக்கு ஏன் தடை விதிக்கக்கூடாது. தமிழகத்தில் தமிழ் இல்லை என்றால் வேறு எந்த நாட்டிக் தமிழ் இருக்கும் என கேள்விகள் எழுப்பினர்.

மேலும், தமிழில் படித்தவர்களை    ஊக்குவிக்க வழங்கப்படும் சலுகைகள் தவறாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன எனக் கூறி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர். மதுரையை சார்ந்த சக்திராவ் தொடுத்த வழக்கில், இடஒதுக்கீடு குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்டும் பதிலளிக்கவில்லை என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது

 

Top