logo
புதுக்கோட்டையில் மின் வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர் தர்னா போராட்டம்

புதுக்கோட்டையில் மின் வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர் தர்னா போராட்டம்

04/Nov/2020 03:13:56

புதுக்கோட்டை:மின்வாரியத் தலைவரின் சர்வாதிகார, தொழிலாளர் விரோதப் போக்கை கண்டித்து நவ.4-இல் அறிவிக்கப்பட்டிருந்த மாநிலம் தழுவிய தர்ணா போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து புதுக்கோட்டையில் மின் வாரிய தொழில்சங்கங்களின் கூட்டமைப்பினர் இன்று தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோரிக்கைகள்: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநராக செயல்பட்டுவரும் பங்கங்குமார் பன்சால் அவர்கள் தொழிற்சங்க தலைவர்களை சந்தித்துப் மறுத்து பொறியாளர்களின் கோரிக்கைகளைப் பற்றி எடுத்துரைக்க நேரம் கோரினால் அனுமதிப்பதில்லை.

கொரோனா காலத்தில் இல்லாத காரணத்தினால் பெண்கள் உள்ளிட்டோர்களுக்கு விடுப்பு தொடர்பான தமிழக அரசாணை மின்வாரியத்தில் அமல்படுத்த வேண்டும்.உப்பூர், எண்ணூர் மற்றும் புதிய மின் உற்பத்தித் திட்டங்களில் பணியாற்றி வந்த பொறியாளர்கள், அலுவலர்களை இடமாற்றம் செய்து, பதவிகளை ரத்து செய்து உற்பத்தி பணிகளில் தொய்வு ஏற்படுவதுடன் உள்ளிட்டவைகள் கேள்விக்குறியாக மாறும் நிலை உருவாகியுள்ளது.

துணை மின் ஓய்வு பெற்றவர்களை சங்கராபுரம், சமயநல்லூர் தலைமையக துணை மின் நிலையம் ஆகிய மூன்று மின் நிலையங்களை 2 ஆண்டுகளுக்கு தனியாருக்கு ரூ. 93.67 இலட்சத்திற்கு விடுத்துள்ளார். பலகோடி துணை மின் நிலையங்களை தனியாரிடம் விடுவது வேலை வாய்ப்புகள் பறிபோவதுடன், பொறியாளர்களின் உயர்வுகள் கானல் நீராக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

துணை மின் நிலையங்களை பாராமரிப்பதை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவைக் கைவிட வேண்டும்.பதவி உயர்வுகளையும், புதிய வேலை வாய்ப்புகளையும் பறிக்கக் கூடாது. அரசாணை 304 -ஐ மின் வாரியத்தில் அமலாக்க வேண்டும். 1.12.2019 முதல் வழங்க வேண்டிய ஊதிய பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும்.

மின் ஊழியர்கள், பொறியாளர்கள், அலுவலர்கள், பகுதிநேர ஊழியர்கள் மற்றும் ஒப்பந்த வாழியர்கள் அனைவருக்கும் பாரபட்சமின்றி போனஸ் வழங்க வேண்டும். சரண்டர் லீவுக்கான தொகையை வழங்க வேண்டும். 52 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த தர்னா போராட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு மின்சாரத் தொழிலாளர் சம்மேளச் செயலர் பி.பிரகாஷ், தமிழ்நாடு மின் கழக தொமுச. செயலர் பி. சண்முகம்,தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு செயலர் கே. நடராஜன், தமிழ்நாடு மின் வாரிய தொழிலாளர் பொறியாளர் ஐக்கிய  சங்க மாநிலத் தலைவர் சி. கண்ணன், தமிழ்நாடு மின் வாரிய பொறியாளர் சங்க செயலர் கே. முத்துகிருஷ்ணன், தமிழ்நாடு  மின் ஊழியர் காங்கிரஸ் செயலர் எம். லெட்சுமணன் ஆகியோர் பேசினர். இதில், பல்வேறு தொழில் சங்கங்களைச் சேர்ந்த நூற்றும் மேற்பட்ட ஊழியர்கள், தொழிலாளர்கள் பங்கேற்றனர்.


Top