logo
பேரறிவாளன் கருணை மனு மீது தமிழக ஆளுநர் விரைந்து முடிவெடுக்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

பேரறிவாளன் கருணை மனு மீது தமிழக ஆளுநர் விரைந்து முடிவெடுக்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

03/Nov/2020 09:47:00

தில்லி: பேரறிவாளன் கருணை மனு மீது தமிழக ஆளுநர் விரைந்து முடிவெடுக்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. பேரறிவாளன் கருணை மனு மீது 2 ஆண்டுகளாக ஆளுநர் முடிவெடுக்காதது குறித்து அதிருப்தி தெரிவித்த உச்சநீதிமன்றம், கருணை மனு விவகாரத்தில் ஆளுநர் ஏன் தாமதப்படுத்துகிறார். ஆளுநருக்கு தமிழக அரசு ஆலோசனை வழங்கக்கூடாதா,  என்றும் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

எழுவர் விடுதலை குறித்து ஆளுநர் காலம் தாழ்த்துவது மனித நேயமற்ற அதிகார அத்துமீறல்: மு.க.ஸ்டாலின் டுவிட்

சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் எழுவர் விடுதலை குறித்து ஆளுநர் காலம் தாழ்த்துவது மனித நேயமற்ற அதிகார அத்துமீறல் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில், பேரறிவாளன் உள்ளிட்டோரின் விடுதலையில் ஆளுநர் விரைந்து எடுக்க வேண்டும். முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேடிக்கை பார்த்திராமல் வலியுறுத்த வேண்டும். 29YearsEnoughGovernor  என்ற ஹொஷ்டெக்கும் பதிவிட்டுள்ளார். 


Top