logo
மின்தடை ஏற்பாட்டால் பொறுத்துக்கொள்ள மின்வாரிய ஊழியர்கள் வேண்டுகோள்

மின்தடை ஏற்பாட்டால் பொறுத்துக்கொள்ள மின்வாரிய ஊழியர்கள் வேண்டுகோள்

03/Nov/2020 08:36:27

மின்வாரியத்தலைவரின் தொழிலாளர் விரோதப் போக்கை கண்டித்து நாளை(நவ.4) மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் எதிரில் நடக்க இருக்கும் மாநிலம் தழுவிய தர்ணா போராட்டத்தில் கலந்து கொள்ள இருப்பதால் மின்தடை ஏற்பட்டால் பொறுத்துக் கொள்ளுமாறு  ஊழியர்கள் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

நாங்கள் எங்களுக்காக மட்டும் போராடவில்லை. உங்களுக்காகவும் தான் போராடுகின்றோம். உங்களுடைய வருங்கால தலைமுறைக்காகவும் போராடுகின்றோம்.எங்களுடைய நியாயமான கோரிக்கைகளை  பெற போராடுகின்றோம். எங்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான சலுகைகளை பெற போராடுகின்றோம்.எங்களுடைய பதவிகள் பறிக்கப்படுகின்றன அதற்காக போராடுகின்றோம்.

மின் துறையை தனியாரிடம் கொடுப்பதை எதிர்த்து போராடுகின்றோம். மின் துறையில் நிலவும் காலிப்பணியிடங்களை நிரப்ப போராடுகின்றோம்.கொரனா காலத்தில் 100 சதவீத பணியாளர்களுடன் மக்கள் பணியாற்றிய தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய போனஸ் மற்றும் ஊக்க தொகை கேட்டு போராடுகின்றோம். மின் துறையில் நிலவும் காலி பணியிடங்களில் தமிழர்களை கொண்டு நிரப்பிட போராடுகின்றோம்.

எங்களுக்கு கிடைக்க வேண்டிய பதவி உயர்வுகள் வழங்கப்பட வேண்டும் என்று போராடுகின்றோம்.துணை மின் நிலையங்களை தனியாருக்கு குத்தகைக்கு  விடுவதால் அங்குள்ள பதவிகள் பறிக்கப்படுகின்றன,அதனால் போராடுகின்றோம். எங்களுக்கு கிடைக்க வேண்டிய வருடாந்திர ஊதிய உயர்வு இதுவரை பேச்சுவார்த்தை நடைபெறாததால் போராடுகின்றோம்.

எங்களுக்கு கிடைக்க வேண்டிய சரண்டர் விடுமுறைக்கான தொகையை கேட்டு போராடுகின்றோம். தினம் தினம் பலியாகும் மின் சொந்தங்ளின் உயிரிழப்புகளை தடுக்க போராடுகின்றோம். அரசாங்க ஆணை 304 அமல்படுத்த வேண்டி போராடுகின்றோம். இவ்வளவு கஷ்டங்களையும் பொறுத்துக்கொண்டு பணியாற்றி வருகின்றோம். எங்களுக்காக 4-11-2020 மின்தடை ஏற்பட்டால் பொறுத்துக் கொள்ளுங்கள். நாங்கள் எங்களுக்காக போராடவில்லை உங்களுக்காக போராடுகின்றோம். சில மணி நேரம் மின்தடை ஏற்பட்டால்  பொறுத்துக் கொள்ளுங்கள் என வேண்டுகோள் விடுத்திருக்கின்றனர். 

                                                                              

        


Top