logo
ஈரோட்டில் வீட்டில் வீட்டில் 2.5 டன் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்த   பெண் கைது

ஈரோட்டில் வீட்டில் வீட்டில் 2.5 டன் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்த பெண் கைது

03/Nov/2020 06:30:24

ஈரோட்டில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த இரண்டரை டன் ரேஷன் அரிசியை ஈரோடு டவுன் போலீஸார் கைப்பற்றி பறிமுதல் செய்தனர், இது தொடர்பாக பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

ஈரோடு வளையக்கார வீதியில் உள்ள குப்பிபாலம் பழனிச்சாமி என்பவர் வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக ஈரோடு டவுன் போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.போலீஸார் இன்று(3.11.2020)  பிற்பகலில்  அங்கு சென்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வீட்டில் 50 சிப்பமாக இரண்டரை டன் ரேஷன் அரிசி, விற்பனைக்கு தயாராக வைக்கப்பட்டிருந்தது உறுதி செய்யப்பட்டது. வீட்டில் இருந்த பழனிச்சாமி மனைவி ஜெயந்தி(49). என்பவரை போலீஸார் கைது செய்தனர். மேலும், ரேஷன் அரிசி கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஒரு ஸ்கூட்டி, இரண்டரை டன் ரேஷன் அரிசியை போலீஸார் கைப்பற்றி பறிமுதல் செய்தனர்.

விசாரணையில், ஈரோடு கருங்கல்பாளையத்தை சேர்ந்த முருகன் என்பவருக்கு முகவராக வளையக்கார வீதி பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் இருந்து ரேஷன் அரிசியை சேகரித்து ஜெயந்தி மூட்டையாக கட்டி வைப்பார். இதனை குறிப்பிட்ட நாட்களுக்கு ஒரு முறை வந்து முருகன் எடுத்துச் செல்வதும் தெரியவந்தது .நாளை (நவ.4) ரேஷன் அரிசி மூட்டைகளை எடுத்து செல்ல இருந்த நிலையில் ரேஷன் அரிசி மூட்டைகள் பிடிபட்டது குறிப்பிடத்தக்கது.  தலைநறைவாக உள்ள முருகனை போலீஸார் தேடி வருகின்றனர்.

ரேஷன் அரிசி மூட்டைகள், பெண், ஸ்கூட்டி ஆகியவற்றை ஈரோடு உணவுபொருட்கள் கடத்தல் தடுப்பு நுண் அறிவு பிரிவு போலீசாரிடம் ஈரோடு டவுன் போலீஸார் ஒப்படைத்தனர்.ரேஷன் அரிசி கடத்தல் விவகாரம் தொடர்பாக அப்பெண்ணிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


Top