logo
திருப்பூர்,கோவையை தொடர்ந்துஈரோட்டிலும் மு.க .ஸ்டாலினை விமர்சித்து சுவரொட்டிகள்:தி.மு.க.வினர் போராட்டம்

திருப்பூர்,கோவையை தொடர்ந்துஈரோட்டிலும் மு.க .ஸ்டாலினை விமர்சித்து சுவரொட்டிகள்:தி.மு.க.வினர் போராட்டம்

03/Nov/2020 01:17:35

ஈரோடு:தி.மு. .தலைவர் மு . . ஸ்டாலினை விமர்சித்து திருப்பூர், கோவை மாவட்டங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தது.இதை கண்டித்து தி.மு..வினர் சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ள இடங்களில் ஒன்று திரண்டு சுவரொட்டியை கிழித்து எறிந்தனர்.கோவையில் தி.மு. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.இந்த பரபரப்பு அடங்குவதற்குள் ஈரோடு மாநகராட்சி பகுதிகளிலும் மு . . ஸ்டாலினை  விமர்சித்து போஸ்டர் ஒட்டப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு மாநகராட்சிக்கு  உட்பட்ட அன்னை சத்யா நகர் பகுதியில் நேற்று இரவு மு . .ஸ்டாலினை விமர்சித்து பல்வேறு இடங்களில் இரண்டு போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. அதில் ஒரு போஸ்டரில் மு. . ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலினுக்கு முத்தமிடுவது போன்ற புகைப்படம் அச்சிடப்பட்டு அதில் குடும்ப ஆட்சி வேண்டுமா? அல்லது விவசாயிகளின் ஆட்சி வேண்டுமா? என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது. மற்றொரு போஸ்டரில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி படம் வைத்து உழைப்பா? மு . .ஸ்டாலின் படம் வைத்து நடிப்பா? என அச்சிடப்பட்டிருந்தது. ஆனால் இதனை எந்த அமைப்பினர் ஓட்டினர் என்பது குறித்த எந்த விவரமும் அதில் இல்லை.

இந்த தகவல் காட்டுத்தீ போல் பரவியது. இதையடுத்து நேற்று இரவு போஸ்டர் ஒட்டப்பட்டுள்ள  இடத்தில் தி.மு..வினர் திரண்டனர். அவர்கள் போஸ்டரை கிழித்து எறிந்தனர். பின்னர் அக்ரஹாரம் பஸ் நிறுத்தம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் கருங்கல்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தி தி.மு. நிர்வாகிகளை  கலைந்து போகச் செய்தனர். இந்நிலையில் இன்று காலை ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு. செயலாளர் முத்துசாமி தலைமையில் நிர்வாகிகள் அன்னை சத்யா நகரில் திரண்டனர். தி.மு. தலைவர் மு. .ஸ்டாலினை விமர்சித்து போஸ்டர் ஒட்டப்பட்டதை  கண்டித்து கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கருங்கல்பாளையம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Top