logo
விடுமுறை தினத்தையொட்டி ஏற்காட்டிற்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு

விடுமுறை தினத்தையொட்டி ஏற்காட்டிற்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு

02/Nov/2020 10:59:37

சேலம்: விடுமுறை தினத்தையொட்டி ஏற்காட்டிற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர். இ-பாஸ் இல்லாமல் வந்த வாகன ஓட்டிகளை போலீசார் எச்சரித்து திருப்பி அனுப்பினர்.

ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் சுற்றுலா தளம் ஏற்காடு ஆகும். இங்கு படகு இல்லம், மான் பூங்கா, அண்ணா பூங்கா, பக்கோடா பாயின்ட், தாவரவியல் பூங்கா, கலைச்சோலை மற்றும் பல்வேறு ஏரிகள் என ஏராளமான சுற்றுலா தளங்கள் உள்ளன. இந்த சுற்றுலா தளங்களை காண தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்வது வழக்கம்.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவால் ஏற்காடு சுற்றுலா தளம் மூடப்பட்டது. இதனிடையே படிப்படியாக தளர்வுகள்கள் அறிவிக்கப்பட்டு, சுற்றுலா தளங்கள் திறக்கப்பட்டுள்ளன.

இதனால் ஏற்காட்டிற்கு சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் சென்று வருகிறார்கள். இந்நிலையில், ஞாயிறுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் ஏற்காட்டிற்கு சுற்றுலா பயணிகளில் வருகை அதிகரித்தது. பல்வேறு இடங்களுக்கு நேரில் சென்று சுற்றி பார்த்து, தங்களது செல்லிட பேசிகளில்  இயற்கை எழில் காட்சிகளை  படம், சுய படம் எடுத்து மகிழ்ந்தனர். மேலும் பலர் தங்களுக்கு பிடித்தமான மரக்கன்றுகளை வீட்டிற்கு வாங்கி சென்றனர். இதனால்ஏற்காட்டில் ஏராளமான சுற்றுலா பயணிகளை காணமுடிந்தது.

இந்நிலையில், ஏற்காடு மலைப்பாதையில் ஆங்காங்கே போலீசார் வாகனத் தணிக்கை செய்தனர். அப்போது இ-பாஸ் இல்லாமல் வந்த கார் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களை தடுத்து நிறுத்தி எச்சரிக்கை செய்து வாகனங்களை திருப்பி அனுப்பி வைத்தனர். 


Top