logo
புதுக்கோட்டையில் முழுமுடக்கத்தை மீறி சுற்றித்திரிந்த 157 வாகனங்கள் பறிமுதல் செய்து வழக்குப்பதிவு

புதுக்கோட்டையில் முழுமுடக்கத்தை மீறி சுற்றித்திரிந்த 157 வாகனங்கள் பறிமுதல் செய்து வழக்குப்பதிவு

19/May/2021 09:12:39

புதுக்கோட்டை, மே: புதுக்கோட்டையில் முழுமுடக்கத்தை மீறி சுற்றித்திரிந்த 157 வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்தனர்.

தமிழ்நாடு முழுவதும் முழு பொதுமக்கள் கொரானா முடக்கம் அமுலில் உள்ள காரணத்தினாலும் கொரணா நோய் தோற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தமிழக அரசு வழிகாட்டுதலின்படி பொதுமக்கள் தங்கள் வசிக்கும் பகுதிகளில் மட்டும் அத்தியாவசியப் பொருட்களை வாங்க தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.

மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில் மாவட்ட எல்லைகளில் தீவிர வாகன சோதனை மேற்கொள்ள 9 வாகன சோதனை சாவடிகளும் மாவட்டத்தில் 20 வாகன சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிர வாகன சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 தேவையின்றி வெளிவரும் நபர்கள் மீதும் அவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என மாவட்ட காவல்துறை பலமுறை அறிவுறுத்தியது. காவல்துறையினர் 18 .5 .2021 -ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் மேற்கொண்ட வாகனத்தணிக்கையின்போது தேவையில்லாமல் வெளியே சுற்றிய 3 நான்கு சக்கர வாகனங்களையும் 154 இருசக்கர வாகனங்களையும்  காவல்துறையினர் பறிமுதல் செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்தனர்.

இது குறித்து மாவட்ட  காவல்கண்காணிப்பாளர் எல். பாலாஜிசரவணன் கூறியதுஇனி வரும் நாட்களில் விதிமுறைகளை மீறுவோர் மீது கடும் சட்டபூர்வமான நடவடிக்கை மேற்கொள்ள  புதுக்கோட்டை மாவட்ட காவல்துறையினருக்கு அறிவுறுத் தப்பட்டுள்ளது. பொதுமக்கள் காவல்துறைக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் முழு ஒத்துழைப்பு  அளிக்க வேண்டும் என்றார் அவர்.

Top