logo

நசியனூர் ரோடு அருகே இன்று குப்பை கழிவுகளில் தீ விபத்து

02/Nov/2020 08:40:36

ஈரோடு நசியனூர் ரோடு விவேகானந்தர் சாலை குடியிருப்புப் பகுதி அருகே காலி இடத்தில் குப்பைகள் கொட்டப்பட்டு இருந்தது. இந்த காலை அந்த குப்பை கழிவுகளில் இருந்து திடீரென புகை வந்தது பின்னர் சிறிதுநேரத்தில் தீ மளமளவென கொளுந்து விட்டு எரியத் தொடங்கியது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் சிலர் ஈரோடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் சுமார் 30 நிமிடம் போராடி தீயை அணைத்தனர். 

Top