logo
ஈரோடு பி.பெ. அக்ரஹாரத்தில் மனு நீதி முகாமில் 145 பயனாளிகளுக்கு ரூ.4.17லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்

ஈரோடு பி.பெ. அக்ரஹாரத்தில் மனு நீதி முகாமில் 145 பயனாளிகளுக்கு ரூ.4.17லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்

02/Nov/2020 08:15:59

ஈரோடு பி.பெ. அக்ரஹாரத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இன்று நடந்த மனு நீதி திட்ட முகாமுக்கு  ஆட்சியர் சி. கதிரவன் தலைமை வகித்தார். எம்எல்ஏ.,க்கள் ராமலிங்கம், தென்னரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 இதில், பி.பெ.அக்ரஹாரம், பி.எஸ்.அக்ரஹாரம், நஞ்சை தளவாய்பாளையம், வைராபாளையம் ஆகிய பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள், வீட்டு மனை பட்டா கேட்டும், அடுக்குமாடி குடியிருப்புகள் ஒதுக்கீடு செய்யக்கோரியும், முதியோர், விதவை உதவித்தொகை வழங்க கோரியும், அடிப்படை பிரச்சனைகளான குடிநீர், தெரு விளக்கு, சாலை வசதி, கழிவு நீர் வடிகால் வசதி உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக 126 மனுக்களை அளித்தனர். 

முன்னதாக, நிகழ்ச்சியில் 145 பயனாளிகளுக்கு ரூ.4லட்சத்து 17ஆயிரத்து 911 மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இதில், சமூகப்பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 22 பயனாளிகளுக்கு ரூ.2.64 லட்சம் மதிப்பீட்டில் விதவை உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளும், 50 பேருக்கு ஸ்மார்ட் ரேஷன் கார்டும் வழங்கப்பட்டது.

மேலும், தோட்டக்கலைத்துறையின் சொட்டு நீர் பாசனம் அமைக்க ஒரு விவசாயிக்கு ரூ.40ஆயிரத்து479 மானியமும், வேளாண்துறையின் சார்பில் 3 பயனாளிகளுக்கு ரூ.1லட்சத்து 13 ஆயிரத்து432 மதிப்பீட்டில் சொட்டுநீர் பாசனம், மழைத்தூதுவன், தார்பாலின் உள்ளிட்ட வேளாண் உபகரணங்களும், முதியோர் உதவித்தொகை பெறும் 69 பேருக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விலையில்லா வேட்டி சேலை வழங்கப்பட்டது.

இந்த முகாமில்,  மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, மாநகராட்சி ஆணையாளர் மா. இளங்கோவன், ஈரோடு  ஆர்டிஓ சைபுதீன், இணை இயக்குநர்(வேளாண்மை) சின்னுசாமி, தனித்துணை ஆட்சியர் இந்திரா, தாசில்தார் பரிமளாதேவி மற்றும் அதிமுக பகுதி செயலாளர்கள் மானோகரன், பழனிச்சாமி, கேசவமூர்த்தி, ஜெகதீஷ்,தங்கமுத்து, ஜெயலலிதா பேரவை இணை செயலாளர்கள் வீரக்குமார், பாவை அருணாச்சலம், மாணவரணி இணை செயலாளர் நந்தகோபால், ஆவின் துணை தலைவர் குணசேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Top