logo
ஈரோட்டில் ஏஐடியுசி நூற்றாண்டு நிறைவு  கொடியேற்றுவிழா

ஈரோட்டில் ஏஐடியுசி நூற்றாண்டு நிறைவு கொடியேற்றுவிழா

01/Nov/2020 04:10:36

ஈரோடு: இந்தியாவின் முதல் மத்திய தொழிற்சங்கமான ஏஐடியுசி தொடங்கப்பட்டு நூறாண்டுகள் (31-10-1920 - 31-10-2020) நிறைவடைந்ததையொட்டி, ஈரோடு மாவட்ட ஏஐடியுசி சுமைதூக்கும் தொழிலாளர் சங்கத்தின் பிபி.அக்ரஹாரம் கிளை சார்பில் இன்று (1-11-2020) கிளைச் சங்க அலுவலகம் முன்பு கொடியேற்றுவிழா நடைபெற்றது.


நிகழ்ச்சிக்கு, ஏஐடியுசி மாவட்ட துணைத் தலைவர்  டி.ஏ.செல்வம் தலைமை வகித்தார். சங்கத்தின் தலைவர் எஸ்.டி.பிரபாகரன் சங்கக் கொடியினை ஏற்றி வைத்தார். தமிழ்நாடு ஏஐடியுசி சுமைதூக்கும் தொழிலாளர் சம்மேளன மாநிலப் பொதுச் செயலாளர் எஸ்.சின்னசாமி ஏஐடியுசி நூறாண்டு கால வரலாறு குறித்தும், மத்திய பிஜேபி-மோடி அரசைக் கண்டித்தும், ஏழு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தியும் வரும் 26.11.2020 அன்று நடைபெற உள்ள அகில இந்திய பொதுவேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டம் பற்றியும் விளக்கிப் பேசினார்.

ஏஐடியுசி கட்டடத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர்  சி.சுந்தரம், ஏஐடியுசி வார்ப்பிங் சைசிங் தொழிலாளர் சங்க நிர்வாகிகள்  எம்.ஆர்.ரவிச்சந்திரன், பி.மகேஷ், ஏஐடியுசி தோல் பதனிடும் தொழிலாளர் சங்க துணைச் செயலாளர் தோழர் பி.வீரமுத்து, சிபிஐ மாணிக்கம்பாளையம் கிளைச் செயலாளர்  பி.மகேஷ், சங்க கிளைத் தலைவர் தோழர் .இஸ்மாயில், செயலாளர்  எஸ்..முஜிபுர் அலி, துணைத் தலைவர்  ஆர்.ராமசாமி, துணைச் செயலாளர் தோழர்A.ஷேக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நவம்பர் 26 - வேலை நிறுத்தம் - மறியலில் பங்கேற்க உறுதியேற்பு:

மத்திய அரசின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத, விவசாயிகள் விரோத, தேச விரோத சட்டங்களையும், நடவடிக்கைகளையும் கண்டித்தும், வருமான வரி செலுத்தும் அளவுக்கு வருவாய் ஈட்டாத அனைத்து குடும்பங்களுக்கும் கொரோனா நிவாரணமாக மாதம் 7500 ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும், ஒரு நபருக்கு மாதம் 10 கிலோ அரிசி வழங்க வேண்டும், விவசாயிகள் விரோத வேளாண் சட்டங்களளையும், தொழிலாளர்கள் விரோத சட்டத் தொகுப்புகளையும் உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும், 

பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கும், அந்நியருக்கும் விற்கக்கூடாது, தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தை 100 நாள் வேலையை 200 நாட்களாக உயர்த்தி, நகரப்பகுதிகளுக்கும் விரிவுபடுத்தி, தினக்கூலியை உயர்த்த வேண்டும்.

அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும், குறைந்த பட்ச ஓய்வூதியத்தை மாதம் 6000 ரூபாயாக உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நவம்பர் 26-ல் நடைபெறும் நாடுதழுவிய பொது வேலை நிறுத்தத்தில்  பங்கேற்பதென் றும், அன்று ஈரோட்டில் நடைபெறும் அனைத்துச் சங்க மறியல் போராட்டத்தில் அனைத்து  தொழிலாளர்களும் பங்கேற்பதென்றும் உறுதியேற்கப்பட்டது.

Top