logo
வேளாண் சட்ட மசோதாக்களை திரும்பெற வலியுறுத்தி காந்தி சிலை முன்பு ஆர்பாட்டம்

வேளாண் சட்ட மசோதாக்களை திரும்பெற வலியுறுத்தி காந்தி சிலை முன்பு ஆர்பாட்டம்

31/Oct/2020 05:49:30

ஈரோடு: கோபிசெட்டிபாளையத்தில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்ட மசோதாக்களை திரும்பெற வலியுறுத்தி காந்தி சிலை முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுட்ட காங்கிரஸ் கட்சியினர் கட்சி அலுவலகத்தில் சத்தியாகிரக அறவழி உண்ணாவிரத போரட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட விவசாயம் தொடர்பான மூன்று சட்டங்களுக்கு தமிழ்நாடு, பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள விவசாயிகள் கடுமையான எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையி,ல் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைமை தமிழகம் முழுவதும் விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டத்தை எதிர்த்து அறவழியில் போராட அனுமதி கேட்டிருந்த நிலையில் தமிழக அரசு போரட்டத்திற்க்கு அனுமதி வழங்கவில்லை.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தில் ஈரோடு வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் நகராட்சி அலுவலகம் முன்புள்ள காந்தி சிலைக்கு ஊர்வலமாக சென்று மாலை அணிவித்த கட்சி தொண்டர்கள் வேளாண் சட்ட மசோதவை திரும்ப பெற வலியுறித்தி மத்திய மாநில அரசுகளை கண்டித்து காந்தி சிலை முன்பு  முழக்கங்கள்  எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

அதனைத் தொடர்ந்து, கோபிசெட்டிபாளையத்தில் உள்;ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் சர்தார் வல்லபபாய் படேல் மற்றும் இந்திராகாந்தி ஆகியோர்  உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த பின்னர் 300 -க்கும் மேற்பட்டோர்கள் சத்தியாகிரக அறவழி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், இந்த போராட்டங்களுக்கு பிறகு மத்திய அரசு வேளாண் சட்டத்தை திரும்ப பெறவில்லை என்றால் இந்தியா முழுவதும் உள்ள மக்களை திரட்டி சட்டத்தை திரும்ப பெறும் வரை போரட்டத்தில் ஈடுபடப்போவதாக தெரிவித்தனர். 


Top