18/Oct/2020 05:42:25
ஈரோடு பெரிய சேமூர் பகுதியில் நடந்த அதிமுக ஆண்டுவிழா கொண்டாட்டத்துக்கு பெரியசேமூர் பகுதி செயலாளர் தங்கமுத்து தலைமை வகித்தார். நிகழ்ச்சியில், எம்எல்ஏக்கள் கே.வி. ராமலிங்கம், கே.எஸ். தென்னரசு ஆகியோர் கலந்துகொண்டு கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். நிகழ்ச்சியில், ஜெ பேரவை இணைச் செயலாளர் வீரகுமார், மாணவரணி நந்தகுமார், பகுதி நிர்வாகி கோவிந்தராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.