logo
கடம்பூர் மலைப்பகுதியில் காட்டாற்று வெள்ளம் - மக்கள் அவதி

கடம்பூர் மலைப்பகுதியில் காட்டாற்று வெள்ளம் - மக்கள் அவதி

11/Oct/2020 03:18:33

ஈரோடு: ஈரோடு மாவட்டம், கடம்பூர் மலைப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக சக்கரை பள்ளம் தரைப்பாலத்தை  மூழ்கடித்து காற்றாற்று வெள்ளம் அதிகளவில் செல்கின்றது.  

இந்த தரைப்பாலம் வழியாக  கடந்து குரும்பூர் கிராமத்திற்கு இருசக்கர வாகனம் அரசு பேருந்தில் செல்லவேண்டிய  மக்கள் வேறு வழியின்றி  கரையிலேயே காத்திருக்க நேரிட்டது. ஆனால், அபாயத்தை உணராமல் கால்நடைகளை காட்டாற்று வெள்ளத்தில்  ஒரு சிலர் கடக்கச் செய்தது பார்ப்பவர்களை அதிர்ச்சியடையச் செய்தது. இப்பகுதியில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். 


Top