11/Oct/2020 11:20:24
சென்னை: திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் 15.9.2020 -இல் நடந்த முப்பெரும் விழாவில் இணையத்தின் மூலம் திமுகவில் எளிதாக உறுப்பினர் சேர்க்கும் திட்டத்தை தொடங்கி வைத்த 25 நாட்களிலேயே 10 லட்சம் புதிய உறுப்பினர்களை நெருங்கியுள்ளது.
சென்னை தெற்கு, கலைஞர்நகர் தெற்கு திமுக சார்பில் இணையம்மூலம் உறுப்பினர் சேர்க்கையை எம்ஜிஆர் நகரில்
138 -ஆவது வட்ட துணை செயலாளர் எம். சபரி தலைமையில் பகுதி செயலாளர் கே_கண்ணன் தொடங்கி வைத்தார். மாநில வர்த்தகரணி செயலாளர் கவிஞர் காசிமுத்துமாணிக்கம் பங்கேற்று புதிய உறுப்பினர்களுக்கு டிஜிடல் உறுப்பினர் அட்டையை வழங்கினார்.
இதில், வட்ட செயலாளர் இரா செழியன், நிர்வாகிகள் மு. அன்பழகன், வள்ளிநாயகம், அஜந்தா ரவி, பொன்னுரங்கம், ஏ. ஜெகதீசன், ராமமூர்த்தி, ஆர். சசிகுமார், விநாயகம், அ. கதிரேசன், நந்தகோபால், புனிதகுமார், அருண்குமார், வழக்கறிஞர் பாலாஜி, மகேந்திரன், பெரியசாமி, தஞ்சை ராஜா, அமல்ராஜ், குமரன், செண்பகவள்ளி, நிஷா உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர். இத்தகவலை திமுக மாநில வர்த்தகர் அணி செயலர் கவிஞர் காசிமுத்துமாணிக்கம் தெரிவித்துள்ளார்.