logo
பவானி ஜமக்காளத்திற்கு சிறப்பு அஞ்சல் உறை வெளியீடு

பவானி ஜமக்காளத்திற்கு சிறப்பு அஞ்சல் உறை வெளியீடு

27/Aug/2021 08:59:26

ஈரோடு, ஆக: இந்திய அஞ்சல் துறை சார்பில் தமிழ்நாட்டில் உள்ள புவிசார் குறியீடு பெற்ற பொருட்களுக்கு சிறப்பு சேர்க்கும் வகையில், சிறப்பு அஞ்சல் உறை வெளியிடப்பட்டு வருகின்றது. 

இந்நிலையில், சென்னையில்  நடைபெற்ற நிகழ்ச்ச்சியில் புவிசார் குறியீடு பெற்ற பவானி ஜமக்காளத்திற்கு சிறப்பு சேர்க்கும் வகையில், சிறப்பு அஞ்சல் உறை வெளியிடப்பட்டது. இந்த உறையை தமிழ்நாடு அஞ்சல்துறை தலைவர் வீணா ஸ்ரீநிவாஸ் வெளியிட ஆதிதிராவிடர் வீட்டுவசதி மேம்பாடு ஆணையத்தின் பொதுமேலாளர் காந்திமதி பெற்றுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் மண்டல அஞ்சல்துறை தலைவர்கள், இயக்குநர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டதாக ஈரோடு முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ஸ்டெபான் சைமன்டோபியாஸ் தெரிவித்துள்ளார்.

Top