logo
ஈரோடு மாவட்டத்தில்  ஒரே நாளில் ஊரடங்கை மீறிய 203 வாகனங்கள் பறிமுதல்:ரூ.1.33 லட்சம் அபராதம்

ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் ஊரடங்கை மீறிய 203 வாகனங்கள் பறிமுதல்:ரூ.1.33 லட்சம் அபராதம்

27/Jun/2021 09:05:49

ஈரோடு, ஜூன்: ஈரோடு மாவட்டத்தில்  ஒரே நாளில் ஊரடங்கை மீறிய 203 வாகனங்களை பறிமுதல் செய்த போலீஸார் ரூ.1.33 லட்சம் அபராதம் விதித்தனர்.

தமிழகத்தில் கொரோனா 2 -ஆவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த வரும் ஜூலை 5-ஆம் தேதி வரை தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீடிக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கை மீறி வெளியே சுற்றினால் வாகனங்கள் பறிமுதல் செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட எஸ்பி  சசிமோகன் தெரிவித்திருந்தார்.

33-ஆவது நாளான சனிக்கிழமை மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அதில் முக கவசம் அணியாமல் வந்த 213 பேருக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது. சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு தலா ரூ.500 அபராதம் விதிக்கபட்டது.

ஊரடங்கு தடையை மீறி சுற்றியதாக 211 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மேலும் 197 இருசக்கரவாகனங்களும், 6 நான்கு சக்கர வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். ஒரே நாளில் ரூ.1 லட்சத்து 33 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டதாக  போலீசார் தெரிவித்தனர். போலீசாரின் தீவிர வாகனத் தணிக்கை நடவடிக்கைகளால் தேவையின்றி வெளியே சுற்றுபவர்கள் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Top