logo
கொரோனா சிகிச்சை முடிந்து விஜயகாந்த், பிரேமலதா இன்று வீடு திரும்புகின்றனர்

கொரோனா சிகிச்சை முடிந்து விஜயகாந்த், பிரேமலதா இன்று வீடு திரும்புகின்றனர்

02/Oct/2020 03:07:07

கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா ஆகியோர் சிகிச்சை முடிந்து இன்று வீடு திரும்புகின்றனர்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் ஆகிய இருவரும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், இருவரது உடல்நிலை குறித்தும் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட இருப்பதாக தெரிவிக்கப்பபட்டுள்ளது.  


    

Top