logo
ஈரோடு மாநகர பகுதியில் அனுமதியின்றி செயல்பட்டதாக  5 ஜவுளி கடைகளுக்கு சீல் வைப்பு

ஈரோடு மாநகர பகுதியில் அனுமதியின்றி செயல்பட்டதாக 5 ஜவுளி கடைகளுக்கு சீல் வைப்பு

22/Jun/2021 02:08:29

ஈரோடு, ஜூன்: ஈரோடு மாநகர பகுதியில் அனுமதியின்றி செயல்பட்டதாக  5 ஜவுளி கடைகளுக்கு சீல் வைத்து மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

 ஈரோடு மாநகர் பகுதியில் கடந்த மூன்று நாட்களாக மாநகராட்சி அலுவலர்கள் ஆங்காங்கே சோதனை செய்து முக கவசம் அணியாமல் வருபவர்கள், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதவர்கள், அனுமதியின்றி கடையை திறந்து வைத்து  வியாபாரத்தில் ஈடுபடுபவர்களைக் கண்காணித்து அபராதம் விதித்து கடைகளைப் பூட்டி சீல் வைத்து வருகின்றனர்.

இதைப் போல் செவ்வாய்க்கிழமை  மாநகராட்சி பணியாளர்கள் மாநகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் ஆங்காங்கே தீவிர சோதனை ஈடுபட்டு வந்தனர். நேற்று ஒரே நாளில் முக கவசம் அணியாமல் வந்த 112 பேருக்கு தலா ரூ. 200 அபராதம் விதிக்கப்பட்டது.

 இதேபோல் அனுமதியின்றி ஜவுளி கடையை திறந்து வியாபாரத்தில் ஈடுபட்ட 5 கடைகளுக்கு தலா ரூ 5,000 அபராதம் விதிக்கப்பட்டு அந்த  5  கடைகளும் பூட்டி சீல் வைக்கப்பட்டது. கடந்த 3 நாட்களில் மட்டும் முககவசம் அணியாமல் வந்த 300-க்கும் மேற்பட்டவர்களுக்கு  தலா ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோல் 9 கடைகளுக்கு ரூ 5,000 அபராதம் விதித்து, இந்தகடைகளுக்கும் பூட்டி சீல் வைக்கப்பட்டதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Top