logo
முதல்வருக்கானபொருளாதார ஆலோசனைக்குழுவை அமைக்க தமிழகஅரசு முடிவு: ஆளுநர்உரையில் தகவல்

முதல்வருக்கானபொருளாதார ஆலோசனைக்குழுவை அமைக்க தமிழகஅரசு முடிவு: ஆளுநர்உரையில் தகவல்

21/Jun/2021 01:23:43

சென்னை, ஜூன்:தமிழக முதல்வருக்கான    பொருளாதார   ஆலோசனைக் குழுவைஅமைக்க     தமிழக அரசு முடிவு: ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 16-ஆவது சட்டப் பேரவையின் முதல் கூட்டத் தொடா் சென்னை கலைவாணா் அரங்கத்தில்திங்கள்கிழமை காலை 10 மணிக்குத் தொடங்கியது.

சட்டப்பேரவைத் தோ்தலுக்குப் பிறகு நடைபெறும் புதிய பேரவையின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றி கூட்டத்தொடரை தொடக்கிவைத்தார்.

ஆளுநர் தமது உரையில் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் தமிழக பொருளாதார இலக்கை எட்ட, முதல்வருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவை அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்தார்.

அந்தக் குழுவில் ரிசர்வ்  வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க பொருளாதார நிபுணர் எஸ்தர் டப்லோ, ஒன்றிய அரசின் முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன், ஒன்றிய அரசின் முன்னாள் நிதித்துறைச் செயலர் டாக்டர் எஸ்.நாராயணன் மற்றும் ஜீன் ட்ரெஸ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்  ஆளுநர் உரையில் குறிப்பிட்டார்.

Top