logo
மேடை மெல்லிசைக் கலைஞர்கள் நல வாரியம் அமைக்க வேண்டும்:  வைகோ  கோரிக்கை

மேடை மெல்லிசைக் கலைஞர்கள் நல வாரியம் அமைக்க வேண்டும்: வைகோ கோரிக்கை

20/Jun/2021 01:58:02

சென்னை, ஜூன்: தமிழக மேடை மெல்லிசைக் கலைஞர்கள் நல வாரியம் அமைக்க வேண்டும் என  தமிழக அரசுக்கு மதிமுக பொதுச்செயலர்   வைகோ  கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக வைகோ வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு முழுமையும் சுமார் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மேடை மெல்லிசைக் கலைஞர்கள் இருக்கின்றனர். அவர்களுடைய குடும்ப உறுப்பினர்களும் சேர்ந்து நிகழ்ச்சிகளில் பங்கு கொள்கின்றனர். இசைத் தொழிலை நம்பி வாழ்கிறார்கள்.


கோவில் திருவிழாக்கள் , திருமணம், மங்கல நிகழ்வுகள் , அரசு விழாக்கள் அமைச்சர் பெருமக்கள் . பங்கேற்கும் பொது நிகழ்ச்சிகள் இவைகளில் மெல்லிசை கச்சேரிகள் நடந்து வந்தன. இத்தொழிலைத் தவிர வேறு எந்தத் தொழிலும் செய்ய முடியாத செய்யத் தெரியாத கலைஞர்கள் கடுமையாகப் பாதிப்படைந்துள்ளனர். இசை நிகழ்ச்சிகளுக்கு கடுமையாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு விட்டதால் இவர்களது வாழ்க்கை கேள்விக்குறியாகி விட்டது.

உணவகங்களிலும் சிறு கடைகளிலும்  குறைந்த ஊதியத்திற்கு வேனல செய்கின்றார்கள்.கலைகளை வளர்த்த தமிழகத்தில், இசைக் கலைஞர்களின்  வாழ்வாதாரங்களை மீட்டெடுக்கின்ற வகையில், காவல்துறையின் உரிய அனுமதியுடன் இசைக் கச்சேரிகள் நடத்துவதற்கு உரிய அனுமதி தர வேண்டும்.

தமிழ்நாடு மேடை மெல்லிசைக்.கலைஞர் களுக்கு  உதவித் தொகைகள் கிடைத்திட வேண்டும்; அவர்களுக்குத் தனி நல வாரியம்அமைத்துத் தர வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

Top