logo
தேசிய வருவாய்வழி திறனறித்தேர்வு: அரையப்பட்டி அரசுப்பள்ளி மாணவிகள் 5 பேர் தேர்வு

தேசிய வருவாய்வழி திறனறித்தேர்வு: அரையப்பட்டி அரசுப்பள்ளி மாணவிகள் 5 பேர் தேர்வு

18/Jun/2021 05:37:54

புதுக்கோட்டை:  தேசிய வருவாய்வழி திறனறித் தேர்வில் புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள  அரையப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 5 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

 ஒவ்வொரு ஆண்டும் என்எம்எம்எஸ் எனப்படும் தேசிய வருவாய்வழி திறனறித் தேர்வு எட்டாம் வகுப்பு முடித்த மாணவ, மாணவிகளுக்கு நடத்தப்பட்டுவருகிறது. இத்தேர்வில் வெற்றிபெறுபவர்களுக்கு 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் ஒவ்வொரு மாதமும் ஆயிரம்  ஊக்கத்தொகையாக  வழங்கப்படும்.

 இந்நிலையில், நிகழாண்டு நடத்தப்பட்ட திறனறித் தேர்வில் ஆலங்குடி அருகேயுள்ள  அரையப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவிகள் எஸ்.நித்தியா, ஆர்.கவிப்பிரியா, பி.சாரதி, வி.பவித்ரா, சி.சிவநிஷா ஆகிய 5 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அரையப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் வெள்ளிக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. அதில், அறந்தாங்கி மாவட்டக் கல்வி அலுவலர் கு.திராவிடச்செல்வம் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவிகளுக்கு வாழ்த்துத் தெரிவித்தார்.

 நிகழ்வில், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் எஸ்.ஆர்.வடிவேல், பள்ளித் தலைமை ஆசிரியர் பெ.பாண்டியன், ஊராட்சித் தலைவர் துரை.மலர்விழி,முன்னாள் ஊராட்சித் தலைவர் வடிவேல், தமுஎகச மாவட்டச் செயலர் சு.மதியழகன், ஆசிரியர்கள் .குணசேகரன், ஜீவானந்தம், மணிகண்டன், ரெங்கநாதன், பாலு, சிவ.பாலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

Top