logo
 ஈரோட்டில் மாவட்டத்தில்   2-ஆம் கட்ட நிவாரண தொகை, 14 வகையான மளிகை பொருட்கள் வினியோகம்: அமைச்சர் முத்துசாமி தொடக்கி வைப்பு

ஈரோட்டில் மாவட்டத்தில் 2-ஆம் கட்ட நிவாரண தொகை, 14 வகையான மளிகை பொருட்கள் வினியோகம்: அமைச்சர் முத்துசாமி தொடக்கி வைப்பு

15/Jun/2021 07:53:26

ஈரோடு, ஜூன்: ஈரோட்டில் மாவட்டத்தில்   2-ஆம் கட்ட நிவாரண தொகை, 14 வகையான மளிகை பொருட்கள் வினியோகத்தை வீட்டுவசதித்துறை  அமைச்சர் சு. முத்துசாமி செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தார்.

தி.மு. தேர்தல் அறிக்கையில் கொரோனா நிவாரண தொகையாக ரேஷன் கடைகளில் அரிசி அட்டைதாரர்களாக உள்ள பொதுமக்களுக்கு  ரூ.4ஆயிரம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி, தமிழக முதல்-அமைச்சராக மு..ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன் கடந்த மாதம் முதற்கட்டமாக ரேஷன் கடைகள் மூலம் முதற்கட்டமாக கொரோனா நிவாரண தொகை ரூ.2ஆயிரம் வழங்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி கடந்த 3-ஆம் தேதி 14 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு மற்றும் 2ம் கட்ட கொரோனா நிவாரண தொகை ரூ.2ஆயிரம் ஆகியவற்றை வழங்கி துவக்கி வைத்தார். பிற மாவட்டங்களில் ஜுன் 15-ஆம் தேதி முதல் நிவாரண தொகையும், மளிகை பொருட்கள் தொகுப்புகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதன்படி, ஈரோடு மாவட்டதில் 1,152 ரேஷன் கடைகளில் 7 லட்சத்து 25 ஆயிரத்து 353 ரேஷன் கார்டுதாரர்களுக்கு முதற்கட்ட நிவாரணத் தொகை வழங்கப்பட்டது.  2-ஆம் கட்ட நிவாரண தொகை மற்றும் 14 வகையான பொருட்கள் பெற வீடு வீடாக சென்று ரேஷன் கடை ஊழியர்கள் கடந்த சில நாட்களாக டோக்கன் விநியோகம் செய்தனர். அந்த டோக்கனில் நிவாரண தொகை வழங்கப்படும் தேதி, நேரம் போன்றவை குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஈரோட்டில் கொரோனா நிவாரண தொகை, 14 வகையான மளிகை பொருட்கள் ரேஷன் கார்டு தாரர்களுக்கு இன்று வழங்கப்பட்டது., ஈரோடு காசிபாளையம் கூட்டுறவு நியாய விலை கடைகளில் தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி பொதுமக்களுக்கு கொரோனா நிவாரண தொகை ரூ.2ஆயிரம், 14 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கினார்.

இதைத்தொடர்ந்து முத்தம்பாளையம், கவுண்டச்சிபாளையம், வெள்ளோடு, பெருந்துறை ஆர்.எஸ்., புங்கம்பாடி, வேப்பம்பாளையம் ஆகிய பகுதியில் ரேஷன் கடைகளில் அரசின் நிவாரண தொகை, மளிகை பொருட்கள் வழங்கும் பணியை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, ஈரோடு ஆட்சியர் சி.கதிரவன், மாநகராட்சி ஆணையர் மா. இளங்கோவன் உள்பட பலர் உடனிருந் தனர்

ரேஷன் கடைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் மட்டம் போடப்பட்டு இருந்தது. அதில் பொது மக்கள் வரிசையில் நின்று பொருட்களை வாங்கிச் சென்றனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டு தனிமை யில் இருப்பவர்கள் தனிமை காலம் முடிந்தவுடன் ரேஷன் கடைகளில் நிவாரண தொகை,  14 வகையான மளிகைப் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்

Top