logo
மறைந்த சமூக செயற்பாட்டாளர் அருண்மொழியின் பிறந்தநாள்: புதுக்கோட்டை அரசு  மருத்துவமனைக்கு  உபகணங்கள்

மறைந்த சமூக செயற்பாட்டாளர் அருண்மொழியின் பிறந்தநாள்: புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு உபகணங்கள்

09/Jun/2021 01:47:31

 

புதுக்கோட்டை, ஜூன்: புதுக்கோட்டையில் மறைந்த சமூக செயற்பாட்டாளர் அருண்மொழியின் பிறந்தநாளை முன்னிட்டு புதுக்கோட்டை அரசுமருத்துவக்கல்லூரி  மருத்துவமனைக்கு  வீல்சேர், பல்ஸ் ஆக்சி மீட்டர், தர்மா மீட்டர், தானியங்கி சானிடைசர் மிஷன், சனிடைசர், முக கவசம் உள்ளிட்ட 1.50 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களும் தூய்மை பணியாளர்களுக்கு நிவாரணப் பொருட்களும் வழங்கப்பட்டன.


புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் அருண்மொழி . இவர், கஜா புயல் காலகட்டத்திலும் நீட் தேர்விற்காக வெளிமாநிலங்களில் தேர்வு மையங்களுக்கு சென்ற மாணவர்களுக்கும் கொரோனா முதல் அலையின் போது உணவின்றி தவித்த பொது மக்களுக்கும் பல்வேறு வகையான உதவிகளை செய்து வந்தார்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அருண்மொழி திடீரென்று மாரடைப்பால் காலமானார். இது புதுக்கோட்டை மாவட்ட மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இந்நிலையில் உயிரிழந்த சமூக செயற்பாட்டாளர் அருண்மொழியின்  செயல்பாடுகளை பிரதிபலிக்கும் விதமாக அவரது  பிறந்த நாள் நிகழ்ச்சியை அவரது நண்பர்களும்  உறவினர்களும்  செவ்வாய்க்கிழமை நடத்தினர்.


இந்நிகழ்வில் தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி, தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன், புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் முத்துராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டு அருண்மொழியின் உருவப்படத்துக்கு மலரஞ்சலி செலுத்தினர்.

 இதையொட்டி, புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு  வீல்சேர், பல்ஸ் ஆக்சி மீட்டர், தர்மா மீட்டர், தானியங்கி சானிடைசர் கருவி, சானிடைசர், முககவசம் உள்ளிட்ட ரூ.1.50 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களும் புதுக்கோட்டை நகராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர் களுக்கு நிவாரணப் பொருட்களையும் வழங்கினர். புதுக்கோட்டை நகரின் முக்கிய பிரமுகர்கள் மற்றும் ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகள், நண்பர்கள் உறவினர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

Top