logo
பேரிடர்கால ஆபத்துகள் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவிக்க தனி வாட்ஸ் அப் எண், இணைய தள வசதி  அறிமுகம்

பேரிடர்கால ஆபத்துகள் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவிக்க தனி வாட்ஸ் அப் எண், இணைய தள வசதி அறிமுகம்

09/Jun/2021 01:09:49

சென்னை, ஜூன்: பேரிடர் காலங்களில் பொது மக்கள் தங்கள் பகுதிகளில் ஆபத்துகள் குறித்தான தகவல்களை தெரிவிக்க தனி வாட்ஸ் அப் எண். (Whats App) மற்றும் இணைய வாயிலாக தகவல் பதிவு செய்ய  புதிய வசதியை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் திரு. கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன் தகவல் தெரிவித்துள்ளார்.

 

இது தொடர்பாஅவர் வெளியிட்ட அறிக்கைபேரிடர் காலங்களில், பாதி மக்களுக்கு பேரிடர் குறித்தான தகவல்களை குறித்த நேரத்தில் தெரியப்படுத்தும் ஒரு அமைப்பு முறையினை செய்திகள் உருவாக்குவது மிக முக்கியமானதாகும்.

இந்திய வானிலை ஆய்வு மையம், இந்திய தேசிய கடல்சார் தகவல் மையம், மத்திய நீர்வள ஆணையம் போன்ற அமைப்புகளிட மிருந்து பெறப்படும் கனமழை, வெள்ளம், புயல், நிலநடுக்கம், சுனாமி போன்ற பேரிடர்கள் குறித்தான எச்சரிக்கைத் தகவல்கள் TNSMART செயலி மூலமும், டிவிட்டர்(TWITTER), பேஸ் புக்( FACE BOOK) உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலமும், அச்சு மற்றும் மின்னணு ஊடகங்கள் வாயிலாகவும் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

மேலும், பேரிடர்கள் மற்றும் விபத்துக்களை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க ஏதுவாக, பொதுமக்கள் தகவல்முன்னெச்ணிக்கை கோண்மைக்கென தனிப்பட்ட  WHATS APP எண்  90453 6083 துவக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணுக்கு WHATSAPP மூலம் வரப்பெறும் பேரிடர்கள் தொடர்பான முன்னெச்சரிக்கை  தகவல்கள் தொடர்புடைய அலுவலர்கள் / துறைகளுக்கு அனுப்பப் பட்டு, உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இது மட்டுமின்றி பொது மக்கள் அவர்கள் வசிக்கும் பகுதிகளில் ஏற்படும் நேரலை பேரிடர் ஆபத்துகள் குறித்து தகவல்கள் தெரிவிக்க ஏதுவாக தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் இணையதளத்தில் மக்கள் களம் (Citizens Corner) வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே, பொது மக்கள் முன்னெச்சரிக்கை தகவல்களை மேற்படி WHATSAPP எண் மூலமாகவும், இணையதளம் வாயிலாகவும் தெரிவிக்கலாம்.

சென்னையில் உள்ள மாநில அவசரக் கட்டுபாட்டு மையம், தகவல் தொடர்பு  மையமாக 24 மணி நேரமும் தொடர்ந்து செயல்படுகின்றது. பேரிடர் காலங்களில், வருவாய் நிருவாக ஆணையர் / மாநில நிவாரண ஆணையர் அவர்களின் நேரடிக்கட்டுப்பாட்டின் கீழ்,

தேசிய பேரிடர் மீட்புப் படை, தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படை, காவல் துறை, தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை உள்ளிட்ட இதர முக்கிய துறைகளின் மூத்த அதிகாரிகளின் துணையோடு 24 மணி நேரமும் கட்டுப்பாட்டு மையமாக செயல்பட்டு, முன் எச்சரிக்கைத் தகவல்களை மிகத்துரிதமாக அனுப்புகின்றது. பொதுமக்கள் 1070 என்ற கட்டணமில்லா தொலைபேசியிலும் தொடர்பு கொள்ளலாம்.

Top