logo
தமிழக சட்டமன்ற தேர்தல் களத்தில் பல முனை போட்டி உருவாகியிருப்பது அதிமுகவுக்கு சாதகமானது: அமைச்சர்  விஜயபாஸ்கர்

தமிழக சட்டமன்ற தேர்தல் களத்தில் பல முனை போட்டி உருவாகியிருப்பது அதிமுகவுக்கு சாதகமானது: அமைச்சர் விஜயபாஸ்கர்

12/Mar/2021 05:55:26

புதுக்கோட்டை, மார்ச்: தமிழக சட்டப்பேரவை தேர்தல் களத்தில் பல முனைப் போட்டி உருவாகியிருப்பது அதிமுகவுக்கு சாதகமானது என்றார் சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர்.

சட்டமன்ற தேர்தலில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளிலும் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களாக சுகாதாரத்துறை  அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர்(விராலிமலை), வீட்டு வசதி வாரிய தலைவர் பி.கே. வைரமுத்து(திருமயம்), வீஆர். கார்த்திக் தொண்டைமான்(புதுக்கோட்டை), மு.ராஜநாயகம்(அறந்தாங்கி) , தர்ம தங்கவேல்(ஆலங்குடி) , உ.ஜெயபாரதி(கந்தர்வகோட்டை-தனி) ஆகியோர் அறிவிக்கப்பட்டனர்.

இதையடுத்து  சென்னையிலிருந்து புதுக்கோட்டைக்கு வருகை தந்த  6 வேட்பாளர்களும்  திருவப்பூர் அருள்மிகு முத்துமாரியம்மன் கோயிலில் வியாழக்கிழமை இரவு சிறப்பு பூஜைகள் நடத்தி சுவாமி  தரிசனம் செய்தனர்.

 இதனைத்தொடர்ந்து   சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்  செய்தியாளரிடம் மேலும் கூறியதாவது:  புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் அதிமுக போட்டியிட  வாய்ப்பளித்த  முதலமைச்சருக்கு நன்றி.  6 தொகுதிகளிலும் அதிமுக வெற்றிபெறும். வரலாற்று சிறப்புமிக்க காவிரி குண்டாறு இணைப்புத் திட்டம், மருத்துவக் கல்லூரி போன்ற  வரலாற்று சாதனைகளை முன்னிறுத்தி பிரசாரம் செய்து  வாக்குகளைப் பெறுவோம்.


தமிழக சட்டம்ன்ற தேர்தல்  களத்தில் பல முனை போட்டி  உருவாகியிருப்பது அதிமுகவுக்கு சாதகமானது. ஏனென்றால் அதிமுகவுக்கென இருக்கும்  தனி வாக்கு வாங்கியுடன் பொது மக்களின்  ஆதரவுடன் அதிமுக  ஹாட்ரிக்  வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும். எதிர்க்கட்சிகளின் வியூகங்களை  எதிர்கொண்டு அதனை தாண்டி அதிமுக வெற்றி பெறுவது உறுசி என்றார் விஜயபாஸ்கர். 

Top