logo
ஈரோடு மணல்மேடுபாலமுருகன் கோயிலில்  உண்டியலா உடைத்து திருட்டு: மூன்றாவது முறையாக நடைபெற்ற சம்பவத்தால் பக்தர்கள் அதிர்ச்சி

ஈரோடு மணல்மேடுபாலமுருகன் கோயிலில் உண்டியலா உடைத்து திருட்டு: மூன்றாவது முறையாக நடைபெற்ற சம்பவத்தால் பக்தர்கள் அதிர்ச்சி

24/Feb/2021 11:09:23

ஈரோடு, பிப்:ஈரோடு மணல்மேட்டில் பாலமுருகன் கோயிலில் மூன்றாவது முறையாக உண்டியலை திருடிச்சென்ற சம்பவம் அப்பகுதியிலுள்ள பக்தர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

 இந்த முருகன் கோயிலில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த மக்கள் தினமும் வழிபட்டு வருவது வழக்கம். கோயிலின் முன்புள்ள வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள உண்டியல் வருடத்துக்கு ஒருமுறை திறக்கப்பட்டு பக்தர்களின் காணிக்கை எண்ணப்படுவது வழக்கம்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு வழக்கம் போல்  பூஜையை முடித்துவிட்டு கோயிலை பூட்டி விட்டு பூஜாரி சென்றார். மறுநாள் காலை மீண்டும்  கோயிலுக்கு வந்த பூஜாரி கோயில் முன்பகுதியில் உள்ள கிரில் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததைப் பார்த்து  அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது கோயில் வளாகத்தில் இருந்த உண்டியல் பூட்டு உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டது தெரியவந்தது.

 இதுகுறித்து தகவலறிந்த  சூரம்பட்டி  காவல் நிலைய ஆய்வாளர்  ரவிக்குமார் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு  வந்து விசாரணை நடத்தினர்.  முதல்கட்ட விசாரணையில் . அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தபோது, மர்ம நபர் ஒருவர் கோயில் பூட்டை உடைத்து உண்டிலில்  பணம் திருடியது தெரியவந்தது.

காணிக்கைப்பணம் ரூ.3,000 வரை பணம் திருடு போயிருக்கலாம் என கூறப்படுகிறது. ஆனால் மொத்தம்  எவ்வளவு பணம் திருடு போனது குறித்து  உறுதியான தகவல் தெரியவில்லை. ஏற்கெகனவே இந்த கோயிலில் இரண்டு முறை உண்டியலை உடைத்து  பணம் திருடப்பட்டது குறிப்பிடதக்கது. தற்போது மூன்றாவது முறையாக உண்டியலில் பணம் திருடு போன சம்பவம்  அப்பகுதி மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Top