logo
மருந்து தட்டுப்பாடு..ஈரோடு மாநகரின் சுகாதார மையங்களில்   கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தம்

மருந்து தட்டுப்பாடு..ஈரோடு மாநகரின் சுகாதார மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தம்

06/Jun/2021 06:59:07

ஈரோடு, ஜூன்: ஈரோடு  மாநகராட்சியிலுள்ள சுகாதார மையங்களில் மருந்து தட்டுப்பாடு காரணமாக கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தப்பட்டன.

ஈரோடு மாநகரில் உள்ள 10 ஆரம்ப சுகாதார மையங்களில் தினமும் 100 பேர் வீதம் கொரோனா தடுப்பூசியான கோவேக்சின், கோவிஷில்டு முதல் டோஸ் இரண்டாம் டோஸ் போடப்பட்டு வருகிறது. தற்போது கொரோனா பரவல் அதிகரித்து உயிரிழப்பும் ஏற்பட்டு வருவதால் தடுப்பூசி போட்டுக்கொள்ள பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

ஆனால் கடந்த சில நாட்களாக தடுப்பூசி போடும் மையங்களில் மக்கள் குவியத் தொடங்கினர். தினமும் 100 பேர் போட வேண்டிய இடத்தில் 500 பேர் வரை  குவிந்தனர்.இதனால் தள்ளுமுள்ளு ஏற்படுகிறது. பல்வேறு இடங்களில் பொதுமக்கள் தடுப்பூசி போடும் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் ஒரு சில இடங்களில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

இதையடுத்து  ஒவ்வொரு மையங்கள் முன்பும் ஒரு அறிவிப்பு பலகை  வைக்கப்பட்டுள்ளது. அதில்  போடப்படும் தடுப்பூசி, எத்தனை பேருக்கு போடப்படுகிறது, முதல் டோஸ், இரண்டாம் டோஸ் விவரம் எழுதப்பட்டிருக்கும்.

இது பற்றி அறியாமல் மக்கள் குவிந்து  விடுகின்றனர். இந்நிலையில் தடுப்பூசிகள் கையிருப்பு தீர்ந்து போனதால் ஈரோடு மாநகரில் உள்ள 10 ஆரம்ப சுகாதார மையங்களில்  ஞாயிற்றுக்கிழமை தடுப்பூசி போடுவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதுஇதனால் இன்று தடுப்பூசி போட வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

Top