04/Jun/2021 06:14:15
புதுக்கோட்டை, ஜூன்: புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் பேரூராட்சி முன் களப்பணியாளர்களுக்கு தமிழ்நாடு பேரூராட்சி பணியாளர் சங்கம் சார்பில் முட்டை மற்றும் சைவ சூப் வழங்கப்பட்டது.
பேரூராட்சி செயல் அலுவலர் மா. விஜயன் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநில தலைவர் மு.செ. கணேசன் கலந்து கொண்டு முன்களப்பணியாளர்களுக்கு முட்டை மற்றும் சைவசூப் வழங்கினார். பாதுகாப்பாக பணியாற்றுவதற்கு முன்கள பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை, சுகாதார மேற்பார்வையாளர் இளங்கோ மற்றும் மாவட்ட துணைதலைவர் கணேசன் ஆகியோர் செய்திருந்தனர்.
இதில், இளநிலை உதவியாளர் பூங்கோதை, பதிவரை எழுத்தர் கணேசன், கணிணி பணியாளர்கள் சத்யபாமா, செல்லம்மாள் அலுவலக உதவியாளர்கள் சபுராம்மாள், அரசி மற்றும் குடிநீர் திட்ட பணியாளர்கள், பரப்புரையாளர்கள், தூய்மை பணியாளர்கள், திடக்கழிவு மேலாண்மை பணியாளர்கள், மஸ்தூர் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.