logo
நவம்பர் 26-இல் வேலைநிறுத்தம் - மறியல்போராட்டம்- ஈரோடுஏஐடியுசி கட்டிடத்தொழிலாளர்கள்  ஆயிரம் பேர் பங்கேற்க முடிவு

நவம்பர் 26-இல் வேலைநிறுத்தம் - மறியல்போராட்டம்- ஈரோடுஏஐடியுசி கட்டிடத்தொழிலாளர்கள் ஆயிரம் பேர் பங்கேற்க முடிவு

20/Nov/2020 05:42:01

ஈரோடு: தமிழ்நாடு ஏஐடியுசி  கட்டடத் தொழிலாளர் சங்கத்தின் ஈரோடு மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் ஈரோட்டில் எம்.கல்யாணசுந்தரம் இல்லத்தில் மாவட்டத் தலைவர் எஸ்.சின்னசாமி தலைமையில் நடைபெற்றது.

சங்கத்தின் மாநிலத் தலைவர்  முன்னாள் எம்எல்ஏ- நா.பெரியசாமி, பொதுச்செயலாளர் தோழர் கே.இரவி ஆகியோர் நவம்பர் 26-ல் நடைபெற உள்ள அகில இந்திய பொது வேலை நிறுத்தம், மறியல் போராட்டம் பற்றியும், ஏஐடியுசி தேசிய, மாநில முடிவுகளையும், சங்க மாநில முடிவுகளையும் விளக்கிப் பேசினர்.

மாவட்டச் செயலாளர்ர் சி.சுந்தரம், மாவட்டப் பொருளாளர்  எம்.குணசேகரன், துணைத்தலைவர்கள்  டி.ஏ.மாதேஸ்வரன், கே.அர்ச்சுனன், பி.ரவி துணைச் செயலாளர்கள் எஸ்.கந்தசாமி, எஸ்.ராஜ்குமார், எம்.பாபு, K.R.கிருஷ்ணமூர்த்தி, என்.கே.ராஜா மற்றும் ஜி.மோகன்ராஜ் உள்ளிட்ட நிர்வாகக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:  மத்திய பிஜேபி அரசின் தொழிலாளர்கள் விரோத சட்டத் தொகுப்புகளையும், விவசாயிகள் விரோத வேளாண் சட்டங்களையும் திரும்பப்பெற வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயப்படுத்துவதை கைவிட வேண்டும்.

வருமான வரி கட்டும் அளவுக்கு வருவாய் ஈட்டாத அனைத்து குடும்பங்களுக்கும் மாதம் 7,500 ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும். ஒரு நபருக்கு மாதம் 10 கிலோ அரிசி, கோதுமை வழங்க வேண்டும்.

அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும். குறைந்த பட்ச ஓய்வூதியத்தை உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாயசங்கங்கள் சார்பில் வரும் நவம்பர் 26-இல் நடைபெறும்  அகில இந்திய பொது வேலைநிறுத்தம் மற்றும் மறியல் போராட்டத்தில் ஈரோடு மாவட்டத்தில் அனைத்து தாலுக்காக்களிலும் ஏஐடியுசி கட்டடத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் 1000 பேர் பங்கேற்பதென முடிவு செய்யப்பட்டது

 கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் நலவாரிங்களில் பதிவுசெய்தல், பதிவைப் புதுப்பித்தல், நலத்திட்ட உதவிகள் வழங்குதல், நிவாரணம் உதவிகள் வழங்குதல் உள்ளிட்ட பிரச்சினைகளை விவாதித்து செயல்பாட்டை மேம்படுத்திட அமைக்கப்பட்டுள்ள மாவட்ட ஆட்சியர் தலைமையிலான மாவட்ட கண்காணிப்பு குழு நீண்ட காலமாக கூட்டப்படாமல் உள்ளது.

இதனால் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண இயலவில்லை. ஆகவே, மாவட்ட ஆட்சியர் தலைமையிலான மாவட்ட கண்காணிப்பு குழுக்கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும். 

 கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரித்தில் தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் ஆன்லைன் மூலம் பதிவுசெய்தல், புதுப்பித்தல், கேட்பு மனுக்கள் சமர்பித்தலில் உள்ள பல்வேறு நடைமுறைப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்றும், பதிவு, புதுப்பித்தலை எளிமைப்படுத்திட வேண்டும். 

தமிழ்நாடு முழுவதும்  நலவாரியப் பதிவைப் புதுப்பிக்காத சுமார் 19 லட்சம் கட்டட, கட்டுமானத் தொழிலாளர்களின் வாரியப் பதிவைப் புதுப்பித்து அவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் கிடைத்திட தமிழக அரசும், தொழிலாளர் துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள்  நிறைவேற்றப்பட்டன.

Top