logo
புதுக்கோட்டையில் காவல்துறையினர் துப்புரவு பணியாளர்களுக்கு இலவசமாக தேனீர், உணவு வழங்கும்  சமூக ஆர்வலர்கள்

புதுக்கோட்டையில் காவல்துறையினர் துப்புரவு பணியாளர்களுக்கு இலவசமாக தேனீர், உணவு வழங்கும் சமூக ஆர்வலர்கள்

28/May/2021 10:13:03

 

புதுக்கோட்டை, மே: புதுக்கோட்டையில் பணியாற்றும் காவல்துறையினர் துப்புரவு பணியாளர்களுக்கு தேனீர், உணவை சமூக  ஆர்வலர்கள்  இலவசமாக வழங்கி வருகின்றனர்.

 புதுக்கோட்டை காமராஜபுரம் பகுதியைச் சேர்ந்த தன்னார்வ இளைஞர்கள் பார்த்திபன், கணேஷ், குமார். இவர்கள் இணைந்து கடந்த ஒரு வார கால முழு முடக்கத்தின்போது பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டுள்ள போலீஸார், துப்புரவு பணியாளர்கள், முன்களப்பணியாளர்கள் தேநீர் கிடைக்காமல் சிரமப்படுவதைக் கருத்தில் கொண்டு  காலை மாலை  இரு வேளைகளிலும் தேனீர் தயாரித்து  இலவசமாக விநியோகித்து வருகின்றனர். மேலும், மதிய வேளையில் உணவும் தயாரித்து புதுக்கோட்டை நகர் முழுவதும் வழங்கி வருகின்றனர். இளைஞர்களது  சேவையை சமூக ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர்.

Top