logo
புதுக்கோட்டையில்  10 வாகனங்களில் கிருமி நாசினி தெளிக்க   மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு

புதுக்கோட்டையில் 10 வாகனங்களில் கிருமி நாசினி தெளிக்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு

25/May/2021 08:47:47

புதுக்கோட்டை, மே: புதுக்கோட்டை நகராட்சி பகுதிகளில்  கொரானா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் 10-க்கு மேற்பட்ட வாகனங்கள் மூலம் லைசால் கிருமிநாசினி தெளிக்கும்  பணியைபுதுகை எம்எல்ஏ- டாக்டர் வை. முத்துராஜா தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து, புதுக்கோட்டை எம்எல்ஏ- டாக்டர் வை. முத்துராஜா கூறியதாவது: புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரே நாளில் 355  பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2 நாள்களில் ஏற்பட்ட பாதிப்பை விட குறைந்துள்ளது

 மாவட்டத்தில் இதுவரை 3 லட்சத்து 70 ஆயிரத்திற்கு மேல் எடுக்கப்பட்டுள்ளது. தினசரி 2000 திற்கும் மேல் RTPCR மாதிரிகள் சேகரிக்கப்படுகிறது. . புதுக்கோட்டை  அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், முத்து மீனாட்சி பல்நோக்கு மருத்துவ மனையிலும்  RT-PCR பரிசோதனை மையங்கள் அமைந்துள்ளன.

மாவட்டத்தில் மொத்தம் 3028 படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளது. அதில் 870 நபர்கள் சிகிச்சையில் உள்ளனர், 2158 படுக்கைகள் காலியாக உள்ளது. ஆக்சிஜன் படுக்கைகள்  - 968. சாதாரண படுக்கைகள் - 1936. தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகள் 124-ம் உள்ளன. இதுவரை 79 ஆயிரம் பேருக்கு மேல்   தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர் என்றார்.

 புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்வில், நகராட்சி பொறியாளர் ஜீவாசுப்பிரமணியன் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Top