logo
இன்றும் நாளையும் மதுரை, விருதுநகர் உள்பட 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

இன்றும் நாளையும் மதுரை, விருதுநகர் உள்பட 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

03/Nov/2020 12:20:12

வடகிழக்கு பருவமழை தொடங்கியிருக்கும் நிலையில், தமிழகத்தில் ஒரு சில இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையை பொறுத்தவரை கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் மட்டும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. 

இந்நிலையில், இன்றும்(நவ.4) நாளையும் (நவ.5)மதுரை, சிவகங்கை, விருதுநகர், கோவை, நீலகிரி ஆகிய 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தனது ட்விட்டர் பக்கத்தில் இத்தகவலை பதிவிட்டுள்ளது.

Top