16/May/2021 11:21:31
புதுக்கோட்டை, மே: தமிழக அரசின் ஆணைப்படி ஆவின் பால் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.3 குறைப்பு நடைமுறைக்கு வந்தது.
இதுகுறித்து, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி வெளியிட்ட தகவல்:
தமிழக முதல்வர் பொறுப்பேற்ற பின்பு 5 முக்கிய அரசாணைகள்
பிறப்பித்துள்ளார்கள். அதில் இரண்டவதாக பொதுமக்கள்
நலன் கருதி, ஆவின் பால் விலையை லிட்டர் ஒன்றுக்கு 3 ரூபாய்
வீதம் குறைத்து
16.5.2021 முதல்
விற்பனை செய்வது.
இந்த அரசாணைக்கு ஏற்ப பொதுமக்கள் ஆவின் பார்லர்கள் மற்றும் சில்லறை விற்பனை கடைகளில் 16.5.2021 முதல் குறைக்கப்பட்ட விலை அமல்படுத்தப்படுகிறது.சமன்படுத்தப்பட்ட பால் ( 250மிலி) தற்போதைய விலைரூ.11.50, புதிய விலை ரூ.11 ம், சமன்படுத்தப்பட்ட பால் ( 500மிலி) தற்போதைய விலைரூ.23, புதிய விலைரூ.21.50 -ம், பசும்பால் ( 500மிலி) தற்போதைய விலைரூ.23, புதிய விலைரூ.21.50 -ம், பசும்பால் (200மிலி) தற்போதைய விலைரூ.10, புதிய விலை ரூ.9.50 -ம்.
நிறைகொழுப்பு பால் ( 1000மிலி)
தற்போதைய விலை ரூ.52, புதிய விலை ரூ.49 -ம், நிறைகொழுப்பு பால்
( 500மிலி) தற்போதைய விலை ரூ. .27, புதிய விலை ரூ.25.50 -ம், தயிர் (200மிலி) தற்போதைய விலை ரூ.10, புதிய விலை ரூ.10 ஆகவும் விலைப்பட்டியல் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் புகார் சம்பந்தமாக 99945 57799, 73737 80224 என்ற அலைபேசி எண்களை
தொடர்பு கொள்ளலாம்.