logo
புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரியில் 100 படுக்கைகளுடன் சித்தா மருத்துவ கொரோனா சிகிச்சை மையம் விரைவில்  திறக்கப்படும்: ஆட்சியர் தகவல்

புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரியில் 100 படுக்கைகளுடன் சித்தா மருத்துவ கொரோனா சிகிச்சை மையம் விரைவில் திறக்கப்படும்: ஆட்சியர் தகவல்

09/May/2021 07:15:04

புதுக்கோட்டை, மே: புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரியில் 100 படுக்கைகளுடன் சித்தா மருத்துவ கொரோனா சிகிச்சை மையம் விரைவில்  திறக்கப்படும் என்றார்  ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி.

புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள அரசு கொரோனா சிறப்பு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி, புதுக்கோட்டை எம்எல்ஏ- டாக்டர் வை. முத்துராஜா ஆகியோர்  கொரோனா  தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர். 

இந்த ஆய்வுக்கு பின்னர் மாவட்ட ஆட்சியர்  கூறியதாவது: புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்பொழுது 1,074 நபர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 655 நபர்கள் அரசு மற்றும் தனியார்  மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர். மீதமுள்ள வர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.  கொரோனா பாதித்த 88  நபர்கள் வெளிமாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர்.  

புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்பொழுது 2,300 படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ள து. இதில் 1,000 படுக்கைகள் கொரோனா  மையத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க உருவாக்கப்பட்டு வருகிறது. பொதுப்பணித்துறை, துணை இயக்குநர் ஆகியோருடன் இணை ந்து படுக்கை வசதியினை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இம்மாத இறுதிக் குள் 1,000 படுக்கை வசதிகள் இரண்டு மடங்காக  அதிகரிக்கப்படவுள்ளது. 

புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 2 ஆக்ஸிஜன் பிளாண்ட்  உள்ளது. இதில் 12 கிலோலிட்டர்  அளவு ஆக்ஸிஜன் சேமிக்கும் திறன் கொண்டது.  தஞ்சாவூர்  மாவட்டம், வல்லத்தில் உள்ள ஆக்ஸிஜன் தயாரிக்கும் நிறுவனத்தில் இருந்து புதுக்கோட்டை மாவட்டத்திற்கு 6 கிலோ லிட்டர் அளவு கொண்ட டேங்கர் லாரி மூலம் ஆக்ஸிஜன் நிரப்பப்ப டுகிறது.

புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள அலுவலர் மூலம் ஆக்ஸிஜன்அளவு கண்காணிக்கப்பட்டு தேவைக்கேற்ப தினசரி தேவையான 3.5 கி.லிட்  முதல் 4 கி.லிட் அளவு ஆக்ஸிஜன் நிரப்பப்படுகிறது.

இதுபோக சிலிண்டர்களிலும் ஆக்ஸிஜன் போதிய அளவு நிரப்பப்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, 13 அரசு மருத்துவ மனைகள், பழைய அரசு தலைமை மருத்துவ மனை, தனியார் மருத்துவமனைகளிலும் ஆக்ஸிஜன் உள்ளது. இணை இயக்குநர் மற்றும் இந்திய மருத்துவ சங்கத்தினர்  மூலமும் தனியார் மருத்துவமனைகளின் ஆக்ஸிஜன் தேவை பூர்த்தி  செய்யப்பட்டு வருகிறது. 

மாநில அளவில் 3 கண்காணிப்பு அலுவலர்கள் அமைத்து அனைத்து மாவட்டங்களிலும் ஆக்ஸிஜன் அளவு பற்றாக்குறை இல்லாத நிலை கண்காணிக்கப்பட்டு வருகிறது.  இதே போன்று   புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கோவிட் கட்டுப்பாட்டு அறையில் அலுவலர் கள் மூலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் ஆக்ஸிஜன் அளவு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக்கல்லூரியில் சித்தா மருத்துவமனையானது விரைவில் 100 படுக்கை வசதிகளுடன் திறக்கப்பட உள்ளது. புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 180 நபர்கள் ஆக்ஸிஜன் படுக்கை வசதியுடன் சிகிச்சையில் உள்ளனர்.  

புதுக்கோட்டை மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் மூலமாக 5 மருத்துவ மனைகளில் நிமிடத்திற்கு 3,000 லிட்டர் அளவு ஆக்ஸிஜன் தயாரிக்கக் கூடிய 5 ஆக்ஸிஜன் உற்பத்தி கலன் அமைக்கப்பட உள்ளதுடன் அந்தந்த மருத்துவமனைகளிலேயே அதற்கான  இடம் தேர்வு செய்யப்பட்டு, பணிகளை விரைவில் முடிக்க நடவடிக்கை மேற் கொள்ளப்படும். கூடுதலாக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்தவமனை யிலும் ஒரு ஆக்ஸிஜன் கலன் அமைப்பதற்கு ஏற்பாடு  செய்யப்பட்டுள்ளது. 

கொரோனா நோயாளிகளுக்கு தேவையான உணவுகள் தனியார் உணவகங்கள் மூலமாகவும் முறையாக வழங்கப்பட்டு வருகிறது. அதேபோன்று மருத்துவக்கல்லூரியிலும் சுகாதாரமான முறையில் உணவுகள் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. நோயாளிகள் புகாரின் பேரில்  வருவாய்த்துறையினர் சமையல் பொருள்களை ஆய்வு செய்தபின் சாப்பாட்டு அரிசி வேறு ரகம் மாற்றப்பட்டுள்ளது.

கோவிட் நோய்தொற்றை தடுக்கும் வகையில் நாளைமுதல் முழு ஊரடங்கு அறிவிக்கப் பட்டுள்ளது. ஊரடங்கின் போது தமிழக அரசு அறிவுறுத்தியுள்ள அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளும் முறையாக கடைபிடிக்கப்படும். பொதுமக்களுக்கு தேவையான அத்தி யாவசிய பொருட்கள் எவ்வித தங்குதடையின்றி விலையேற்றம் இல்லாமல் வழங்க தேவை யான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார் ஆட்சியர்.

எம்எல்ஏ- டாக்டர் முத்துராஜா கூறுகையில்,  தமிழக முதல்வர் ஆணைப்படி, சுகாதாரத்துறை அமைச்சர் வழிகாட்டுதலின்படி புதுக்கோட்டை மாவட்டத்தை கொரோனா இல்லாத மாவட் டமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.  ஆய்வில், புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர்  பூவதி , வருவாய் கோட்டாட்சியர் டெய்சிகுமார் உள்ளிட்டோர்   கலந்து கொண்டனர்.

Top