logo
 கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்: காணொலி காட்சி வாயிலாக  புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியருடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்: காணொலி காட்சி வாயிலாக புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியருடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

07/May/2021 09:03:59

புதுக்கோட்டை, மே: சென்னை  தலைமைச் செயலகத்திலிருந்து காணொளிக் காட்சி  வாயிலாக செயலகத்திலிருந்து காணொளிக் காட்சி  வாயிலாக  கொரோனா  தடுப்பு  நடவடிக்கைகள் குறித்து முதல்வர் மு..ஸ்டாலின்  வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

இக்கூட்டத்தில்புதுக்கோட்டை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும்  கொரோனா  தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்  பி.உமாமகேஸ்வரியுடன்  வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்

 இந்த  ஆய்வின்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள  கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள், சிகிச்சை மையங்கள், காய்ச்சல் முகாம்கள், ஆர்.டி- பிசிஆர் பரிசோதனை எண்ணிக்கை  உள்பட பல்வேறு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

மேலும்அரசு மருத்துவமனைகளில்  ஆக்ஸிஜன் இருப்பு , சிகிச்சைக்குரிய படுக்கைகளின் எண்ணிக்கைதனியார் மருத்துவமனைகளில்  உள்ள 50 சதவீத படுக்கைகள் விவரம், மருத்துவ பணியாளர்களின் எண்ணிக்கை, அடிப்படை வசதிகள் போன்ற தகவல்கள் குறித்தும் கேட்டறிந்தார்

 கொரோனா நோய் தொற்றிலிருந்து பொது மக்களை பாதுகாககும் வகையில் போர்க்கால  அடிப்படையில்  எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் மாவட்ட ஆட்சியருக்கு  காணொலி வாயிலாக முதல்வர் ஆலோசனை வழங்கினார்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில்  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன், அறந்தாங்கி சார் ஆட்சியர் ஆனந்த்மோகன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் எம். சந்தோஷ்குமார், மருத்துவக்கல்லூரி முதல்வர் பூவதி, சுகாதாரத்துறை துணை இயக்குநர்கள் பா. கலைவாணி, விஜயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

Top