logo
20 சதவிகித போனஸ் கேட்டு போக்குவரத்துத் தொழிலாளர்கள் முற்றுகைப் போராட்டம்

20 சதவிகித போனஸ் கேட்டு போக்குவரத்துத் தொழிலாளர்கள் முற்றுகைப் போராட்டம்

10/Nov/2020 06:51:26

புதுக்கோட்டை: சதவிகித போனஸ் கேட்டு போக்குவரத்துத் தொழிலாளர்கள் திங்கள்கிழமையன்று போக்குவரத்துக்கழக புதுக்கோட்டை மண்டல அலுவகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

அனைத்துத் தொழிற்சங்கங்களின் சார்பில் நடைபெற்ற இந்தப் போராட்டத்திற்கு தொமுச மண்டல பொதுச்செயலாளர் எம்.வேலுச்சாமி தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி சிஐடியு  பொதுச்செயலாளர் எஸ்.பாலசுப்பிரமணியன், ஏஐடியுசி  பொதுச் செயலாளர் டி.எம்.கணேசன், ஏஏஎல்எல்எப் பொதுச் செயலாளர் பென்.நாகராஜன், டிடிஎஸ்எப் தலைவர் பி.எல்.குழந்தைவேலு உள்ளிட்டோர் பேசினர். போராட்டத்தை ஆதரித்து தொமுச மாவட்டத் தலைவர் அ.ரெத்தினர், செயலாளர் எம்.கணபதி, ஏஐயுடிசி மாவட்டத் தலைவர் கே.ஆர்.தர்மராஜன், சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் ரெத்தினவேல் ஆகியோர் பேசினர். 

போராட்டத்தில் போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு 20 சதவிகித போனஸ் வழங்க வேண்டும். 1.9.2019 முதல் 14-ஆவது ஊதிய ஒப்பந்தம் அமலுக்கு வரவேண்டும். பல்வேறு குளறுபடிகளைச் செய்து தொழிலாளர்களின் கணக்கில் உள்ள விடுப்பை தன்னிச்சையாக கழித்த புதுக்கோட்டை கழக மண்டல நிர்வாகத்தைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. போராட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்றனர்.


Top