logo
நாடு முழுவதும் பொது ஊரடங்கை அறிவிப்பதே  கொரோனாவை கட்டுப்படுத்த  ஒரே வழி வழியாகும்:  ராகுல்காந்தி

நாடு முழுவதும் பொது ஊரடங்கை அறிவிப்பதே கொரோனாவை கட்டுப்படுத்த ஒரே வழி வழியாகும்: ராகுல்காந்தி

04/May/2021 01:22:54

கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் முழு ஊரடங்கு ஒன்றே தீர்வு என்று  ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பிஏழைகளுக்கு குறைந்தபட்ச வருமான உறுதி திட்டத்தை அறிவித்து ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என கூறினார்.

மத்திய அரசு நடவடிக்கை எடுக்காததால் கொரோனா பலர் உயிரிழந்து வருகின்றனர் என குற்றம் சாட்டினார். பொருளாதாரம் பாதிக்கப்படும் என்பதால் நாடு தழுவிய முழு ஊரடங்கை அமல்படுத்த யோசித்து வரும்  மத்திய அரசு, பாதிக்கப்படும் பகுதிகளில் மட்டும் கடுமையான ஊரடங்கை அமல்படுத்துமாறு மாநில அரசுகளை அறிவுறுத்தியுள்ளது.


இந்தியாவில் கொரோனா வைரசின் 2-ஆவது அலை பாதிப்பு அதிகமாக உள்ளது. நாட்டில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2 கோடியை தாண்டியுள்ளது. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்களில் பகுதியளவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், கொரோனா பரவலை தடுக்க நாடு தழுவிய முழு ஊரடங்கு ஒன்றே தீர்வு என காங்கிரஸ் முன்னாள் தலைவரும் வயநாடு தொகுதி எம்.பியுமான ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

Top