logo
விவசாயிகளின் பிரச்னைகளுக்கு அறிவியல்- தகவல் தொழில்நுட்பத்தின் மூலம்  தீர்வுகாண எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் உதவுகிறது: முதுநிலை விஞ்ஞானி ஆர். ராஜ்குமார்

விவசாயிகளின் பிரச்னைகளுக்கு அறிவியல்- தகவல் தொழில்நுட்பத்தின் மூலம் தீர்வுகாண எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் உதவுகிறது: முதுநிலை விஞ்ஞானி ஆர். ராஜ்குமார்

28/Apr/2021 08:46:53

புதுக்கோட்டை, ஏப்: அறிவியல்- தகவல் தொழில்நுட்ப உதவியுடன் விவசாயிகளின் பிரச்னை களுக்கு தீர்வு காண்பதற்கு எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம்  உதவி செய்கிறது என்றார்  அந்நிறுவனத்தின்:முதுநிலை விஞ்ஞானி ஆர். ராஜ்குமார்.

எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன செயல்பாடுகள் பற்றி இலுப்பூர் மதர்தெரசா வேளாண் கல்லூரி மாணவிக ளுக்கான செயல் விளக்க பயிற்சி முகாம் புதுக்கோட்டை எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்றது.

 முகாமை எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானி ஆர்.ராஜ்குமார் பயிற்சி முகாமை தொடங்கி வைத்து மேலும் அவர் பேசியதாவது:  எம்.எஸ்..சுவாமிநான் ஆராய்ச்சி நிறுவனம் விவசாயிகளின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப உதவியுடன் விவசாயிகளின் பிரச்னைகள் மற்றும் கிராமப்புற மக்களின் உணவு மற்றும் ஊட்டச்சத்து பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது மிக முக்கியமான செயல்பாடாகும். 

அறிவியல் தகவல் தொழில்நுட்ப உதவியுடன் விவசாயிகளின் பூச்சி, நோய் மற்றும் ஊட்டச் சத்து பற்றாக்குறை போன்ற பிரச்னைகளுக்கு விவசாய விஞ்ஞானிகள் மூலம் உடனுக்குடன் தீர்வு வழங்கப்படுகிறது. இந்த செயல்பாடுகளுக்கு விவசாயிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்றார்.


 இதையொட்டி, மாணவிகளுக்கு பயிர் மருத்துவ முகாம், விவசாயிகள் ஹெல்ப்லைன் சேவை, கைபேசி மூலம் குரல்வழி செய்தி அனுப்புதல், மண் மற்றும் பாசன நீர் பரிசோதனை ஆகிய செயல்பாடுகள் குறித்து செயல் விளக்க பயிற்சி அளிக்கப்பட்டது. 

பயிற்சி முகாமில், இலுப்பூர் மேட்டுச்சாலை மதர்தெரசா வேளாண் கல்லூரி மாணவிகள் ஆர்.தனீஸ்ஹா, சி.சௌந்தர்யா, சி.கீர்த்தனா, வி.விருத்திகா, எஸ்.யோகபிரீத்தி, எம்.யாசினி, டி.சுப்புலெட்சுமி, டி.சௌந்தர்யா, எஸ்.விஜயலெட்சுமி, எஸ்.ஹேமராகினி, எஸ்.வைஸ்ணவி  ஆகியோர் பங்கேற்றனர்.  களப்பணியாளர் டி.விமலா  வரவேற்றார். தொழில் நுட்ப அலுவலர் ஆர்.வினோத்கண்ணா நன்றி கூறினார்.

Top