logo
ஈரோட்டில் அண்ணா நினைவு நாள்: திமுக சார்பில்  மாலை அணிவித்து மரியாதை

ஈரோட்டில் அண்ணா நினைவு நாள்: திமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை

03/Feb/2021 04:53:57

ஈரோடு, பிப்:ஈரோடு தெற்கு மாவட்ட திமுக சார்பில் (பிப்.3) அண்ணா நினைவு நாளையொட்டி  அவரது  உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

அண்ணாவின் 52-ஆவது நினைவுநாளையொட்டி  புதன்கிழமை காலை 9 மணிக்கு ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் உள்ள அண்ணா உருவச்சிலைக்கு திமுக துணை பொதுச்செயலாளர் சுப்புலட்சுமிஜெகதீசன் தலைமையில் கட்சியின் மாநில, மாவட்ட, மாநகர நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

முன்னதாக ஈரோடு வீரப்பன்சத்திரம், கொடுமுடி வடக்கு, மேற்கு ஒன்றியம், மொடக்குறிச்சி கிழக்கு, மேற்கு, தெற்கு, சென்னிமலை, ஈரோடு, பெருந்துறை தெற்கு, கிழக்கு, வடக்கு, ஊத்துக்குளி தெற்கு, வடக்கு, மத்திய ஒன்றியம் உள்பட 14 இடங்களில் அண்ணாவின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. 

நிகழ்ச்சியில் மாநில நிர்வாகிகள் சச்சிதானந்தம், சந்திரகுமார், குறிஞ்சி சிவக்குமார், மாவட்ட நிர்வாகிகள் குமார்முருகேஷ், செந்தில்குமார், சின்னையன், பழனிசாமி, திண்டல் குமாரசாமி, பகுதி கழக நிர்வாகிகள் நடராஜன், தண்டபாணி, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் திருவாசகம், இலக்கிய அணி வீரமணி ஜெயக்குமார், வில்லரசம்பட்டி முருகேசன், தொழிற்சங்க நிர்வாகி கோபால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Top