logo
கொரோனா பரவல்: ஈரோடு மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் கிருமி நாசினி தெளிக்கும்  பணி தீவிரம்

கொரோனா பரவல்: ஈரோடு மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரம்

19/Apr/2021 06:48:01

ஈரோடு, ஏப்:ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்பேரின் மாவட்டத்திலுள்ள அனைத்து காவல் நிலையங்களிலும்   கிருமி நாசினி தெளிக்கும்  பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 ஈரோடு மாவட்டத்தில் மீண்டும் கொரோனா வேகமெடுத்து உள்ளதால் அனைத்து தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக கிருமி நாசினித் ஒழிக்கும் பணி மாவட்டம் முழுவதும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.மக்கள் அதிகம் கூடும் இடங்கள், தெருக்கள், வார்டுவணிக நிறுவனங்கள், அலுவலகங்கள், கடைகளில் கிருமி நாசினி செலுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில்ஈரோடு மாவட்ட காவல்கண்காணிப்பாளர்  தங்கதுரை அனைத்து போலீஸ்  நிலையங்களிலும் கிருமி நாசினி தெளிக்க  வேண்டும் என உத்தரவிட்டார்.

ஈரோடு மாவட்டத்தை பொருத்தவரை ஈரோடு, சத்யமங்கலம், கோபி, பவானி, பெருந்துறை ஆகிய உப கோட்டங்களில்  36 காவல்நிலையங்களும் 4 மகளிர் காவல் நிலையங்கள் என மொத்தம் 40 காவல் நிலையங்கள் உள்ளன. இதில்  1800-க்கும் மேற்பட்ட போலீஸார் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இன்று முதல் அனைத்து போலீஸ் நிலையங்களிலும் கிருமிநாசினி தெளிக்கும் பணி தொடங்கியுள்ளது. ஒவ்வொரு போலீஸ் நிலையங்களிலும் அந்தந்த பகுதி உட்பட்ட மாநகராட்சி சுகாதார பணியாளர்கள் கிருமி நாசினியை தெளித்தனர். இதேபோல் போலீசாருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இதுகுறித்து போலீஸார் கூறியதாவதுமாவட்டத்தில் 1834 போலீஸார் பணிபுரிந்து வருகின்றனர். இதில் 90 சதவீதம் பேர் முதல் தவணை கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.இரண்டாம் தவணையாக 15 சதவீதம் பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். ஒரு சிலருக்கு காய்ச்சல் போன்ற சில உபாதைகள் இருந்தது. மத்தபடி போலீசார் அனைவரும் நலமாக உள்ளனர் பாதிப்பு ஏதும் இல்லை என்றனர்.

Top